nz vs aus
மிடில் ஓவர்களில் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை - பாபர் ஆசாம்!
ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 367/9 ரன்கள் எடுத்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 163, மிட்சேல் மார்ஷ் 121 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்திய ஷாஹின் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளும் ஹரிஷ் ரவூஃப் 3 விக்கெட்களும் எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து 368 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு 134 ரன்கள் ஓப்பனிங் ஃபார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த அப்துல்லா ஷபிக் 64, இமாம்-உல்-ஹக் 70 ரன்களில் ஸ்டோய்னிஸ் வேகத்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் பாபர் ஆசாம் 18 ரன்னில் அவுடாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் முகமது ரிஸ்வான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் சவுத் ஷாக்கில் 30, இப்திகார் அகமது 26 ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட அழுத்தத்தில் ரிஸ்வானும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் ஏமாற்றத்தை கொடுத்ததால் 45.3 ஓவரில் பாகிஸ்தானை 305 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
Related Cricket News on nz vs aus
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஸாம்பா சுழலில் வீழ்ந்தது பாகிஸ்தான்; இரண்டாவது வெற்றியைப் பெற்றது ஆஸி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’- ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூறிய ரசிகரிடம் காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
உலகக்கோப்பை தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி சாதனை!
உலகக்கோப்பை தொடரில் அதிகமுறை 5 விக்கெட் விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை ஷாஹின் ஷா அஃப்ரிடி சமன்செய்துள்ளார். ...
-
ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த டெவிட் வார்னர்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்கள் விளாசியதன் மூலம் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: போட்டிப்போட்டு சதமடித்த வார்னர், மார்ஷ்; பாகிஸ்தானுக்கு 368 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 368 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹாரிஸ் ராவுஃப் ஓவரை அடித்து நொருக்கிய வார்னர், மார்ஷ்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலர் ஹாரிஸ் ராவுஃப் வீசிய முதல் ஓவரிலேயே 24 ரன்கள் விளாசப்பட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
விளையாட்டும் இங்கே எளிதானதும் இல்லை - பாட் கம்மின்ஸ்!
இந்த உலகக் கோப்பையில் நாம் பார்க்கின்ற பத்து அணிகளும் போட்டியிடக் கூடிய தகுதியான அணிகள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
உனது தந்தை எப்படி விளையாடணும்னு சொல்லி தரவில்லையா - மார்ஷ், கவாஸ்கர் கலகலப்பு!
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷிடம் உன் தந்தை உனக்கு இப்படி விளையாட சொல்லி தரவில்லையா என்று எழுப்பிய கேள்வி தற்போது வைரலாகி வருகிறது. ...
-
நடுவரை களத்திலேயே விமர்சித்த டேவிட் வார்னர்; வைரல் காணொளி!
தனது விக்கெட் விழுந்த விரக்தியில் டேவிட் வார்னர் நடுவரை நேருக்கு நேர் திட்டியபடி களத்திலிருந்து வெளியேறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்த போட்டியில் பந்துவீசிய விதம் என்னுடைய பெஸ்ட் கிடையாது - ஆடம் ஸாம்பா!
தனிப்பட்ட வகையில் நான் இந்த போட்டியில் பந்துவீசிய விதம் என்னுடைய பெஸ்ட் கிடையாது. இருந்தாலும் என்னுடைய அணியின் வெற்றிக்கு நான் பங்களித்ததில் மகிழ்ச்சி என ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார். ...
-
பொல்லார்டின் சிக்சர் சாதனையை முறியடித்த கிளென் மேக்ஸ்வெல்!
இந்திய மண்ணில் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸின் பொல்லார்ட் சாதனையை தகர்த்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
எங்களுடைய பேட்டிங் மீண்டும் ஜொலிக்கும் என நம்புகிறேன் - குசால் மெண்டிஸ்!
எங்களுடைய பேட்டிங்கில் நாங்கள் சிங்கிள்ஸ் அதிகமாக எடுக்காமல் தவறு செய்து விட்டோம் என தோல்விக்கு பின் இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். ...
-
இனியும் எங்களது வெற்றி தொடரும் - பாட் கம்மின்ஸ்!
கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி சந்தித்தது குறித்து நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47