retention policy ipl 2025
எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி இதனை செய்ய வேண்டும் - ஆர்பி சிங் கருத்து!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளன.
மேற்கொண்டு எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் எத்தனை வீரர்கள் தக்கவைக்கலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டுபாடுகள், விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம் என்றும் அதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், அன்கேப்ட் வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on retention policy ipl 2025
-
ஐபிஎல் 2025: ரிடென்ஷன் விதி, இம்பேக்ட் பிளேயர், ஏலத்தொகை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டது பிசிசிஐ!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டுபாடுகள், விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை பிசிசிஐ நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. ...
-
அதிக வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் - அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் அணிகளை அதிக வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்படும் பட்சத்தில், அந்த அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் அதே அணியில் தொடர்வார்கள் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: காவ்யா மாறன் போட்ட கண்டிஷன்; முடிவு எடுக்குமா பிசிசிஐ!
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் ஏழு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் பிசிசிஐயிடம் கொரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பிசிசிஐ கூட்டத்தில் ஷாருக் கான், நெஸ் வடியாவிற்கு இடையே கடும் வாக்குவாதம்!
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான பிசிசிஐ கூட்டத்தின் போது வீரர்கள் ரீடென்ஷனுக்கான விவாதத்தில் கேகேஆர் அணி உரிமையளர் ஷாருக் கான் மற்றும் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் நெஸ் வடியாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
ஐபிஎல் 2025: ரிடென்ஷன் விதியை மாற்றக் கோரும் ஐபிஎல் அணிகள்; குழப்பத்தில் பிசிசிஐ!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 18ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக, அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த ரிடென்ஷன் விதிமுறைகளை இறுதி செய்யும் பணியை பிசிசிஐ தொடங்கியுள்ளது. ...
-
IPL 2025 Retention Rules: பழைய விதிமுறையை மாற்ற முயற்சிக்கும் பிசிசிஐ!
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அணிகளில் ரிடென்ஷன் விதிகளின்படி வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24