shivam dube
IND vs ENG, 4th Test: இங்கிலாந்து போராட்டம் வீண்; தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர். இதில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று (ஜனவரி 31) நடைபெற்றது.
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இரு அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மீண்டும் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிலும், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணை ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சாகிப் மஹ்மூத் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on shivam dube
-
IND vs ENG, 4th T20I: ஹர்திக், ஷிவம் தூபே அரைசதம்; இங்கிலாந்துக்கு 182 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே, ரமந்தீப் சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
SMAT 2024: ரஹானே அதிரடியில் விதர்பாவை வீழ்த்தியது மும்பை!
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2024: விதர்பா அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SMAT 2024: அதிரடியாக விளையாடிம் அரைசதம் கடந்த ஷிவம் தூபே- காணொளி!
சர்விசஸ் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் மும்பை வீரர் ஷிவம் தூபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். ...
-
IND vs BAN: காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து ஷிவம் தூபே விலகல்; திலக் வர்மாவிற்கு வாய்ப்பு!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிவம் தூபே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது - ஷிவம் தூபே!
ஐபிஎல் தொடரின் போட்டி சூழல் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது. மேலும் அது இன்று சர்வதேச அரங்கில் நாம் காணும் வெற்றிக்கு பங்களிக்கிறது என இந்திய வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய பாண்டியா; கம்பேக் கொடுத்த ஜோர்டன் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டன் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ZIM vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஷிவம் தூபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
தூபேவிற்கு பதில் சாம்சன் விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு!
அமெரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஷிவம் தூபேவிற்கு பதில் சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
தூபேவிற்கு பதில் சாம்சனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
உலகக்கோப்பை போட்டிகளில் ஷிவம் தூபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
துபேவை விட ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னுரிமை அளிப்பேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
உலகக்கோப்பை போன்ற மிகப்பெரும் தொடர்களில் நான் ஷிவம் தூபேவுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண்டியாவிற்கே அதிகளவு முன்னுரிமை கொடுப்பேன் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக், ஷிவம் தூபே ஆகியோர் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் - இர்ஃபான் பதான்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் தூபே இருவரும் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
முதலிரண்டு பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய ராகுல் சஹார்; வைரல் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ராகுல் சஹார் தனது முதலிரண்டு பந்துகளிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்; சன்ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களில் விக்கெட்டை இழந்து சதடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47