shubman gill
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலமானது எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.
அந்த வகையில் நேற்று 10 ஐபிஎல் அணிகளுமே தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது குஜராத் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில்லை அறிவித்துள்ளது.
Related Cricket News on shubman gill
-
நேற்றிரவு நடந்தது இன்னும் வலியை கொடுக்கிறது - ஷுப்மன் கில்!
16 மணி நேரங்கள் கடந்தும் இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வி தமக்கு வலியை கொடுப்பதாக இளம் வீரர் ஷுப்மன் கில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
இறுதிப்போட்டியில் அவர் பெரிய ரன்களை எடுப்பார் என்று கணிக்கிறேன் - ஹர்பஜன் சிங்!
இது ஷுப்மன் கில்லுக்கு மிகவும் பிடித்த மைதானமாகும். அவர் எப்போதுமே அஹ்மதாபாத்தில் ரன்கள் அடிக்க விரும்புவார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
சதம் அடித்தேனா இல்லையா என்பது முக்கியமல்ல - ஷுப்மன் கில்!
தொடக்கத்திலேயே சந்தித்த அதிகப்படியான காய்ச்சலின் தாக்கம் தான் இப்போட்டியில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட போது வெயில் தாங்க முடியாமல் தாம் வெளியேறியதற்கான காரணம் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
சச்சின், தோனி, கோலி வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்!
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், சிராஜ்; டாப் 5 குள் நுழைந்த விராட், குல்தீப்!
ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
மகாராஜ் மாயஜாலத்தில் விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ், இந்திய வீரர் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நான்கு கிலோ வரை எடை குறைந்துள்ளேன் - ஷுப்மன் கில்!
சிகிச்சைக்கு பின் இன்னும் ஃபிட்னஸ் சோதனைக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கும் ஷுப்மன் கில் மருத்துவமனையில் இருந்த சமயங்களில் 4 கிலோ எடை குறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சதத்தை தவறவிட்ட விராட், ஷுப்மன்; இலங்கைக்கு 358 டார்கெட்!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தவரிசை: முதலிடத்தில் பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுகான தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆசாமும், பந்துவீச்சில் ஷாஹின் ஷா அஃப்ரிடியும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். ...
-
என்னுடைய ஃபேவரைட் கிரிக்கெட்டர் என்றால் அது விராட் கோலி தான் - ஷுப்மன் கில்!
தனது கிரிக்கெட் கரியரில் எந்த வீரரை பிடிக்கும்? தான் ஏன் 77 நம்பர் ஜெர்சியை எடுத்துக் கொண்டேன்? என்பது குறித்து சில சுவாரஸ்யமான இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், குல்தீப் முன்னேற்றம்; பாபர் முதலிடம்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
-
நியூசிலாந்தை வெல்ல முடியுமா? - ஷுப்ம்ன் கில் கேள்விக்கு ரோஹித் சர்மா பதில்!
இந்திய அணியில் ஒரு காணிளி தொகுப்புக்காக இளம் வீரர் ஷுப்மன் கில் எல்லா வீரர்களிடமும் சில கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி இருந்தார். தற்பொழுது இது பிசிசிஐ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ...
-
விராட் கோலியைப் பார்த்து கில், ஸ்ரேயாஸ் கற்றுக்கொள்ள வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது பேட்டிங் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24