sl vs afg
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. அதேபோல் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி 52.77 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்பட்டியலின் முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி 55 சதவீதத்துடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
Related Cricket News on sl vs afg
-
SL vs AFG, Only Test: ஆஃப்கானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியாது. ...
-
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AFG, Only Test: மேத்யூஸ், சண்டிமல் அசத்தல் சதம்; வலிமையான முன்னிலையில் இலங்கை அணி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்களை குவித்துள்ளது. ...
-
SL vs AFG, Only Test: பந்துவீச்சாளர்கள் அபாரம்; வலுவான தொடக்கத்தை பெற்ற இலங்கை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs AFG: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு; அணியை வழிநடத்தும் தனஞ்செயா டி சில்வா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரிங்கு சிங்வால் நிச்சயம் தோனி, யுவராஜ் போல அசத்த முடியும் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
தோனி, யுவராஜ் போல வருங்காலங்களில் இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரிங்கு செயல்படுவார் என்று ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் பாராட்டியுள்ளார். ...
-
ரிங்கு சிங்கின் நிதானம் தான் தோனியுடன் ஒப்பிட வைக்கிறது - அஸ்வின் பாராட்டு!
தோனி இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் எப்படி விளையாடுவாரோ, அப்படி விளையாடி வருகிறார் ரிங்கு சிங் என இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ...
-
இதே நிலை இந்திய அணி ஏற்பட்டால் இப்படி சொல்வீர்களா? ரசிகர்களுக்கு அஸ்வின் பதிலடி!
உடலில் பட்டதை பயன்படுத்தி நீங்கள் நேர்மை தன்மைக்கு புறம்பாக எக்ஸ்ட்ரா 2 ரன்கள் எடுத்ததாக நபியை இந்திய ரசிகர்களும் விமர்சித்தனர். ஆனால் அதே நிலைமை நமக்கு ஏற்பட்டால் இந்திய ரசிகர்கள் இப்படி சொல்வார்களா? என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
யுவராஜ் சிங்கின் மினி உருவம் ஷிவம் தூபே - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஷிவம் தூபே கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கேவுக்கு வரும் முன், சிஎஸ்கே அணிக்கு வந்த பின் என்று சொல்ல முடியும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை தட்டி சென்ற விராட் கோலி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அபாரமாக ஃபீல்டிங் செய்த இந்திய வீரர் விராட் கோலிக்கு சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ...
-
இரண்டாவது சூப்பர் ஓவரில் விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை - ஜானதன் டிராட்!
இதற்கு முன்பாக இரண்டு சூப்பர் ஓவர்கள் நடந்திருக்கிறதா? இதைத்தான் நான் சொல்கிறேன். எங்களுக்கு இது புதியதாக இருந்ததால் தெரியவில்லை என ஆஃப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட் கூறியுள்ளார். ...
-
முகமது நபி செய்ததில் எந்த தவறுமில்லை - ராகுல் டிராவிட்!
அது போன்ற ரன்களை நீங்கள் எடுக்க முடியாது என்று தடுக்க விதிமுறைகள் எதுவுமில்லை. எனவே இது விளையாட்டின் ஒரு அங்கமாகும் என இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவும் பாராட்டும் தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24