As indian
மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்த சூர்யகுமார் யாதவ்!
இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், தொடரின் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அந்த அணி தங்களது முதல் வெற்றியைப் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் நடப்பு சீசன் மும்பை இந்தியன்ஸ் அணியின் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளை தவறவிட்டார். இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள அவர், தற்போது முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும், இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றும் தேசிய கிரிக்கெட் அகாடமில் தெரிவித்துள்ளது.
Related Cricket News on As indian
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது - அஷுதோஷ் சர்மா!
சஞ்சய் பங்காரின் அறிவுரை ரஞ்சி கோப்பை தொடரில் எனக்கு உதவியது. அதன் காரணமாக நான் எனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினேன் என்று அஷுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸின் சாதனைய முறியடித்த பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்குகளை எட்டிய முதல் அணி எனும் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : குஜராத்தை பின்னுக்கு தள்ளியது பஞ்சாப் கிங்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்துகின்றது. ...
-
இளம் வீரர்களின் செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியடைகிறேன் - ஷிகர் தவான்!
ஒரு நல்ல தொடக்கத்தை வழங்குவதே திட்டமாக இருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக நான் ஆட்டமிழந்தேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் தோல்வி அடைந்ததற்கான காரணம் இதுதான் - ஷுப்மன் கில்!
நீங்கள் பார்த்திராத வீரர்கள் இதுபோல் திடீரென வந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதுதான் ஐபிஎல் தொடரின் அழகு என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்; அணியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மற்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியால் அதிருப்தியடைந்துள்ள முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அடுத்த ஐபிஎல் சீசனில் அந்த அணியை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: ஷுப்மன் கில் அதிரடியில் தப்பிய குஜராத்; பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரிஷப் பந்த் பேட்டிங் அணுகுமுறையை விமர்சித்த வீரேந்திர சேவாக்!
இப்போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழந்ததற்கு பதிலாக சதமடித்திருக்கலாம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் விளாசிய நோ- லுக் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டான் ரிஷப் பந்த் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24