Aus
இறுதிப்போட்டியை எதிர்நோக்கி கார்த்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு டேவிட் மில்லர் 101 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 47 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்க தவறியதால் 212 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்ததோடு போட்டியையும் பரபரப்பாக்கி விட்டனர். இலகுவாக வெற்றி பெற வேண்டிய எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயத்தை கண் முன் காட்டும் அளவிற்கு தென் ஆப்ரிக்கா வீரர்கள் வெற்றிக்காக போராடினாலும், இலக்கு மிக குறைவானது என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பொறுமையாக விளையாடி 47.2 ஓவரில் இஅக்கை எட்டினர். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 8ஆவது முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
Related Cricket News on Aus
-
இந்தியாவை எதிர்கொள்வோம் என கனவிலும் நினைக்கவில்லை - டிராவிஸ் ஹெட்!
இந்திய அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எதிர்கொள்வோம் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 8ஆவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மில்லர் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 213 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐசிசி உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
அரையிறுதியில் மேக்ஸ்வெல் விளையாடுவாரா? - பாட் கம்மின்ஸ் பதில்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் விளையாடுவாரா என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பதிலளித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மிட்செல் மார்ஷ் காட்டடி; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஹிரிடோய் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 307 இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
கிளன் மேக்ஸ்வெல் மகத்தான இன்னிங்ஸ் விளையாடியுள்ளார் - ரிக்கி பாண்டிங்!
டேவிட் வார்னர், மார்ஷ் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களிடம் வாம்பிழுத்ததே இந்த சரவெடிக்கு காரணம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
இது உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும் - மேக்ஸ்வெல்லை பாராட்டிய விராட் கோலி!
ஆஃப்கானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இரட்டை சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த கிளென் மேக்ஸ்வெல்லை இந்திய வீரர் விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
-
என் வாழ்க்கையில் பார்த்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டத்தை போல் எனது வாழ்வில் எந்தவொரு ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸையும் பார்த்ததில்லை என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ...
-
மேக்ஸ்வெலை எங்களால் நிறுத்த முடியவில்லை - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
எங்களுடைய பவுலர்களின் அசத்தலான ஆட்டத்தால் நல்ல துவக்கத்தை பெற்றும் சில கேட்ச்களை தவற விட்டது தோல்வியை கொடுத்தது என ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி கூறியுள்ளார். ...
-
இந்த வெற்றி குறித்து பேச வார்த்தையே என்னிடம் இல்லை - பாட் கம்மின்ஸ்!
மேக்ஸ்வெல் விடாப்பிடியாக இந்த போட்டியை களத்தில் நின்று முடித்து கொடுக்க வேண்டும் என்று உள்ளே நின்று பேட்டிங் செய்தார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24