Australia cricket team
இதனைச் செய்தால் ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் - மிட்செல் ஜான்சென்!
வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாக்பூரில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் டாப் 2 அணிகளான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஏராளமான உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால் உலகம் முழுவதிலும் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.
இந்நிலையில், இம்முறை நாக்பூரில் நடைபெறும் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் எப்படியாவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுத்து விட்டால் எஞ்சிய வெற்றியை நேதன் லயன் தன்னுடைய அனுபவத்தால் வசமாக்கி விடுவார் என்று முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கூறியுள்ளார்.
Related Cricket News on Australia cricket team
-
பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் - மஹிலா ஜெயவர்தனே!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவர்தனே கணித்துள்ளார். ...
-
IND vs AUS: அடுத்தடுத்து விலகிய வீரர்கள்; கடும் நெருக்கடியில் ஆஸி.!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக முதலிரு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
-
இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை!
இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி சக அணி வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். ...
-
IND vs AUS: விசா பிரச்சனை முடிந்து இந்தியாவிற்கு புறப்பட்டார் உஸ்மான் கவாஜா!
விசா பிரச்சனையால் இந்தியா வருவதில் தாமதமான ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா விசா பிரச்சனை முடிந்து இந்தியா திரும்புகிறார். ...
-
பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் குறித்து இயன் சேப்பல் கருத்து!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் நேதன் லயன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் இந்திய அணி சிறப்பாக கையாண்டுவிட்டால் இந்திய அணி வெற்றி பெறலாம் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
-
கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன்: ஸ்டீவ் ஸ்மித்
கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த கோடைக்கால கிரிக்கெட் சிறப்பாக விளையாடுவேன் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை - இறுதி போட்டிக்கு இந்த அணிகள் தான் முன்னேறும்: ரிக்கி பாண்டிங்!
டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வரும் வேளையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங் முக்கிய கருத்தை கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தும் - ரிக்கி பாண்டிங்!
இந்த வருட டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஹசில்வுட் விலகல்; குழப்பத்தில் சிஎஸ்கே?
இம்மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24