Bcci selection
வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு; மாற்று வீரருக்கான கடும் போட்டியில் அர்ஷ்தீப் , கலீல்!
இந்திய அணி அடுத்த மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்த தொடருக்காகவே தன்னை தயார்படுத்திக்கொள்ள பும்ராவிற்கு இந்த ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. மேற்கொண்டு பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தயார் செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது. இதில் அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். இதில் அர்ஷ்தீப் சிங்கின் பெயர் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
Related Cricket News on Bcci selection
-
என்னால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்த கேள்விக்கு இந்திய வீரர் சஞ்சு சாம்சன் பதிலளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: கேள்விக்குறியாகும் ஹர்திக் பாண்டியா இடம்?
ஐபிஎல் தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு சிறப்பாக பந்து வீசவில்லை எனில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்தும் புறக்கணிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs ENG: முதலிரண்டு டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் அறிமுக வீரர்கள் துருவ் ஜூரல் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47