Champions trophy 2025
சாம்பியன்ஸ் கோப்பைக்கு இந்தியா வரவில்லை என்றால் இழப்பீடு வழங்க வேண்டும் - பாகிஸ்தன் கிரிக்கெட் வாரியம்!
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்தும் வரும் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் நடைபெற இருந்தாலும், ஐசிசி முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உரிமை கோரியது.
ஆனால், அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானிற்கு பயணம் செய்ய இந்தியா மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. என்னதான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தாலும், உலகளாவிய அமைப்பு அதனுடன் முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரஃப் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சல்மான் நசீர் ஆகியோர் அஹ்மதாபாத்தில் உள்ள ஐசிசி நிர்வாகக் குழுவைச் சந்தித்து 2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
Related Cricket News on Champions trophy 2025
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதிப்பெற்ற ஆஃப்கானிஸ்தான்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஃப்கானிஸ்தான் அணி 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கிறதா இங்கிலாந்து?
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வாய்ப்பையும் இங்கிலாந்து இழக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த விருப்பம் தெரித்த வங்கதேசம்
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24