Csk
ஐபிஎல் 2023: புதிய உச்சம் தொட்ட சிஎஸ்கே - ராஜஸ்தான் போட்டி!
சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஸ்வின் தேவ்தத் படிக்கல் ஆகிய மூவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக 20 ஓவர்களில் 175 ரன்கள் அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 176 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டேவான் கான்வே 50 ரன்கள் மற்றும் ரஹானே 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.
மொயின், தூபெ, ராயுடு மூவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேற, சிஎஸ்கே அணி இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டது. 18 பந்துகளில் 54 ரன்கள் தேவை என இருந்தபோது, களத்தில் இருந்த தோனி மற்றும் ஜடேஜா ஜோடி 2 ஓவர்களில் 33 ரன்கள் சேர்த்தனர். 20ஆவது ஓவரில் 21 ரன்கள் தேவைபட்டது. சந்தீப் சர்மா வீசினார். தோனி பேட்டிங்கில் இருந்ததால், அழுத்தத்தில் முதல் இரண்டு பந்துகளை ஒயிடாக வீசினார். அடுத்த பந்தை சுதாரித்து யார்க்கர் வீச, தோனியால் அடிக்க முடியவில்லை. அடுத்த இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர் அடித்து மிரளவிட்டார் தோனி.
Related Cricket News on Csk
-
தோனி குறித்து வைரலாகும் சந்தீப் சர்மா ட்வீட்!
கனவு நிறைவேறியது என்று நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வெற்றி பெற்றுத் தந்த சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பட்ட நேரத்தில் பந்து வீசாமல் தாமதம் ஏற்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
தோனி முன் எந்த திட்டமூம் எடுபடாது - சஞ்சு சாம்சன்!
கடைசி இரண்டு ஓவர் உச்சகட்ட டென்ஷனில் இருந்தேன். ஏனெனில் தோனி முன்பு எந்தவித திட்டமும் எடுபடாது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார். ...
-
தோல்விக்கு காரணம் இவர்கள் தான் - எம் எஸ் தோனி!
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளக்கியுள்ளார். ...
-
இத்தனை ஆண்டு காலம் விளையாட முடிவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன் - எம் எஸ் தோனி!
சென்னை மக்கள் எப்போதுமே பிரமாதமானவர்கள். அவர்கள் முன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தோனி பூர்த்தி செய்வார் - சுனில் கவாஸ்கர் நம்பிக்கை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி இன்னும் முன்னரே களமிறங்குவார் என்று எதிர்பார்பதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இணையத்தை கலக்கும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டும் வகையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...
-
ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் - எம்எஸ் தோனி!
உங்கள் கண் முன் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ப ஒவ்வொரு அடியாக எடுத்து முன் வைக்க வேண்டுமே தவிர புள்ளிகள் பட்டியல் குறித்து யோசிக்க தேவையில்லை என சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
தோனி வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் - அஜிங்கியா ரஹானே!
எனது ஆட்டத்தை ரசித்து நான் விளையாடினேன் என ஆட்டநாயகன் விருது வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
சீனியர் வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் - ரோஹித் சர்மா!
தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தைரியமாக களத்தில் செயல்பட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ரஹானே காட்டடி; மும்பை இந்தியன்ஸை பந்தாடியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அசாத்திய கேட்ச்சைப் பிடித்து அசத்திய ஜடேஜா - வைரல் காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா பிடித்த ஒரு கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: முதல் போட்டியிலேயே சிஎஸ்கேவின் சாதனைப் பட்டியளில் இடம்பிடித்தார் ரஹானே!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் சீனியர் வீரரான ரஹானே 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24