Dunith wellalage
நான் பந்துவீச்சாளர் மீது அதிக அழுத்தம் கொடுக்க முயற்சித்தேன் - துனித் வெல்லாலகே!
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ 1 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின்னர் 56 ரன்னில் எடுத்த நிலையில் நிஷங்காவும் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய துனித் வெல்லாலகே ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடினாலும், மறுமுனையில் வநிந்து ஹசரங்கா, ஜனித் லியானகே, அகிலா தனஞ்செய ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த துனித் வெல்லாலகே அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Related Cricket News on Dunith wellalage
-
SL vs IND, 1st ODI: வெல்லாலகே அரைசதத்தால் தப்பிய இலங்கை; இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
LPL 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷதாப் கான்; கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி அபார வெற்றி!
Lanka Premier League 2024: கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
PAK vs SL, Asia Cup 2023: கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PAK vs SL, Asia Cup 2023: ரிஸ்வான், இஃப்திகார் அதிரடி; இலங்கைக்கு 253 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஃப்திகார் அகமது 253 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாபர் ஆசாமையும் விட்டுவைக்காத வெல்லாலகே; வைரல் காணொளி!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் விக்கெட்டை கைப்பற்றிய துனித் வெல்லாலகேவின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வெல்லாலகே முக்கிய வீரராக மாறுவதற்கான பாதையில் இருக்கிறார் - லசித் மலிங்கா பாராட்டு!
துனித் மிகச் சிறப்பான வீரர். அவர் திறமையான ஆல் ரவுண்டர். பொறுப்புகளை தாங்கும் திறமையை கொண்டவராக இருக்கிறார் என இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் முழுவதுமாக சோதிக்கப்பட்டோம் - கேஎல் ராகுல்!
நாங்கள் நூறு ஓவர் விளையாடவில்லை, ஆனால் நாங்கள் களத்தில் இருந்த ஒவ்வொரு ஓவரும் உடல் ரீதியாக சோதிக்கப்பட்டோம் என்று இந்திய வீரர் கேஎல் ராகுக் தெரிவித்துள்ளார். ...
-
எதிர்வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பான போட்டியை அளிப்போம் - துனித் வெல்லாலகே!
நான் இந்த போட்டியில் என்னுடைய சாதாரணமான ஆட்டத்தையே வெளிப்படுத்த விரும்பினேன் என ஆட்டநாயகன் விருது வென்ற துனித் வெல்லாலகே தெரிவித்துள்ளார். ...
-
வெல்லலாகே, தனஞ்செயா, அசலங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர் - தசுன் ஷனகா!
இந்த ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் களம் இறங்கிய பிறகு ஆடுகளத்திற்கு ஏற்றவாறு எங்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டோம் என்று இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, Asia Cup 2023: மேஜிக் நிகழ்த்திய குல்தீப்; இலங்கையை பந்தாடியது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ...
-
வரலாற்றில் முதல் முறை; இந்தியா மோசமான சாதனை!
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 1974ஆம் ஆண்டு ஆரம்பித்து விளையாடிய 1,036 போட்டிகளில், முதல்முறையாக அனைத்து 10 விக்கெட்டுகளையும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்து மோசமான சாதனையைப் படைத்துள்ளது. ...
-
IND vs SL, Asia Cup 2023: வெல்லாலகே, அசலங்கா சுழலில் 213 ரன்களில் சுருண்டது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
எல்பிஎல் 2023: ஜாஃப்னா கிங்ஸை 117 ரன்களில் சுருட்டியது கண்டி!
பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 118 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24