For csk
சிஎஸ்கே அணியின் கேப்டனாக சதமடித்து சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் அஜிங்கியா ரஹான் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 16 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் தூபே இணை அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து மிராட்டினார்.
Related Cricket News on For csk
-
யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ஷிவம் தூபே - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் ஷிவம் தூபே அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சதமடித்த கெய்க்வாட்; சிக்ஸர் மழை பொழிந்த தூபே - லக்னோ அணிக்கு 211 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் கேஎல் ராகுலின் ஒற்றைக் கை கேட்ச் - காணொளி!
சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் பிடித்த கேட்சின் காணொளி வைரலாகி உள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
தோனியை கண்டதும் கேஎல் ராகுல் செய்த செயல்!
லக்னோ - சென்னை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது கேஎல் ராகுல் தனது முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு அளித்த மரியாதை குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தோனி உள்ளே வந்த உடன் அழுத்தம் எங்கள் பக்கம் வந்து விட்டது - கேஎல் ராகுல்!
தோனி உள்ளே வந்த உடன் அழுத்தம் எங்கள் பந்துவீச்சாளர்கள் பக்கம் வந்து விட்டது. மேலும், தோனி வந்த போது ரசிகர்கள் ஆர்ப்பரித்ததால் எங்கள் இளம் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்துக்கு உள்ளானார்கள் என்று லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டியில் 10 - 15 ரன்கள் வரை குறைவாகவே எடுத்துவிட்டோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இது போன்ற மைதானத்தில் தொடங்குவதற்கு மந்தமானதாகத் தோன்றினாலும், பனியின் தக்கம் இருக்கும் என்பதால் இங்கு 190 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் நிச்சயம் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பந்துவீச அதிக நேரம்; ராகுல், கெய்க்வாட்டிற்கு அபராதம்!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராகுல், டி காக் அரைசதம் - சிஎஸ்கேவை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
101 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட எம் எஸ் தோனி - வைரல் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி 101 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ரவி பிஷ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய மொயீன் அலி - வைரல் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஸ்கே வீரர் மொயீன் அலி அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ஜடேஜா அரைசதம்; தோனி மிரட்டல் ஃபினிஷிங் - லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் பந்திலேயே ரச்சினை க்ளீன் போல்டாக்கிய மொஹ்சின் - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24