India tour
ZIM vs IND, 4th T20I: தொடரை வென்றதுடன் சாதனைகளையும் குவித்த இந்திய அணி!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ரஸா 46 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வல் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on India tour
-
நாங்கள் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது - சிக்கந்தர் ரஸா!
இந்திய அணி பேட்டிங் செய்த விதத்தில் நாங்கள் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது என ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 4th T20I: ஜெய்ஸ்வால், ஷுப்மன் அதிரடியில் டி20 தொடரை வென்றது இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஜிம்பாப்வே அணிக்காக வரலாற்று சாதனை படைத்த சிக்கந்தர் ரஸா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களைக் கடந்த முதல் ஜிம்பாப்வே வீரர் எனும் சாதனையை அந்த அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா படைத்துள்ளார். ...
-
ZIM vs IND, 4th T20I: அரைசதத்தை தவறவிட்ட ரஸா; இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs IND, 4th T20I: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள சஞ்சு சாம்சன்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைவார். ...
-
ZIM vs IND, 4th T20I: ஜிம்பாப்வே அணிக்காக சாதனை படைக்கவுள்ள சிக்கந்தர் ரஸா!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா 12 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை கடப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
ZIM vs IND, 4th T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்திய அணி?
ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது. ...
-
ஃபீல்டிங் எப்போதுமே எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது - சிக்கந்தர் ரஸா!
இந்த போட்டியில் சரியாக ஃபில்டிங் செய்யாத காரணத்தால் நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் கொடுத்தோம். அந்த ரன்களே எங்களுடைய தோல்விக்கும் காரணமாக அமைந்தது என ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 3rd T20I: அபாரமான கேட்ச்சை பிடித்த ரவி பிஷ்னோய் - காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர் - ஷுப்மன் கில்!
இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதே வெற்றிக்கான காரணம் என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 3rd T20I: வாஷிங்டன் சுந்தர் அசத்தல்; தொடரில் முன்னிலைப் பெற்றது இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ZIM vs IND, 3rd T20I: ஷுப்மன், ருதுராஜ் அதிரடியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs IND: ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கும் பிசிசிஐ!
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47