Indian
ஐபிஎல் தொடரில் புதிய வராறு படைத்த உலகக்கோப்பை கேப்டன்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் இந்த ஏலத்தில் அதிகமான விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி 2 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பின்வாங்கியது. ஆனால் 8 கோடியை நெருங்கியதும் சிஎஸ்கே அதிலிருந்து பின் வாங்கியது.
Related Cricket News on Indian
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: விறுவிறுப்பாக தொடங்கிய ஏலம்; டிராவிஸ் ஹெட்டை வாங்கியது ஹைதராபாத்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ...
-
இன்னும் 100% குணமடையவில்லை - ரிஷப் பந்த்!
வேகமாக குணமடைந்து வரும் தாம் இன்னும் 100% குணமடையவில்லை என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
தோனி தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - ஜெரால்ட் கோட்ஸி!
ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டால் மகத்தான கேப்டனாக போற்றப்படும் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடி நிறைய அனுபவத்தை கற்கும் வாய்ப்பு தமக்கு கிடைக்கும் என்று கோட்ஸி கூறியுள்ளார். ...
-
இனி ஓவருக்கு இரண்டு பவுன்சர்; அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் அமல்!
ஐபிஎல் 17ஆவது சீசன் முதல் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீசலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. ...
-
அடுத்த 15 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்ஷன் - இர்ஃபான் பதான்!
வேகத்துக்கு சாதகமாக பேட்டிங்க்கு சவாலாக இருக்கக்கூடிய தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்திய சாய் சுதர்சன் அடுத்த 10 – 15 வருடங்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை காண்பித்ததாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷன் விலகல்; கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் இஷான் கிஷன் தனிப்பட்ட காரணங்களால் விலகியதையடுத்து, மாற்று வீரராக கேஎஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை டிரேடிங் முறையில் வங்க நினைத்த ஐபிஎல் அணி; மறுத்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ள நிலையில் மும்பை வீரர் ரோஹித் சர்மாவை டிரேடிங்கில் வங்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மும்பைக்காக ரோஹித் சிறந்த கேப்டனாக செயல்பட்டார் - ஏபி டி வில்லியர்ஸ்!
மும்பை அணியால் வளர்க்கப்பட்ட ஹர்த்திக் பாண்டியா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ரசிகர்கள் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியத்தை கொடுப்பதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். ...
-
பயிற்சியாளரின்றி களமிறங்கும் இந்திய அணி; டிராவிட்டின் மாஸ் பிளான்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. ...
-
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்க வேண்டும் - ஸ்ரீசாந்த்!
சஞ்சு கேப்டனாக இருப்பதில் அவர் அதனுடைய தீவிரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது பட்லரை கேப்டன் ஆக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ...
-
முறையற்ற பந்துவீச்சு; மனீஷ் பாண்டேவுக்கு தடை - பிசிசிஐ அதிரடி!
பிசிசிஐ உள்நாட்டில் பந்து வீசும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிலரின் பந்து வீசும் முறையில் குறைபாடுகளை கண்டுள்ளதாகவும், அவர்களின் பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாகவும், அந்தக் குறிப்பிட்ட வீரர்களின் மாநில கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது. ...
-
ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மிகப்பெரும் தவறு - ஆகாஷ் சோப்ரா!
சமீபத்திய வருடங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து வரும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து மும்பை தவறான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
-
மும்மை இந்தியன்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்; சிஎஸ்கேவுக்கு முதலிடம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அணியை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதிலிருந்து ரசிகர்கள் விலகி வருகின்றனர். ...
-
ரோஹித்திற்கு ஆதரவாக பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்!
ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நீக்கியது தமது இதயத்தை உடைக்கும் நிகழ்வாக அமைந்திருக்கிறது என அந்த அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24