M mohammed
எனக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்துவதற்கு நான் முயற்சிக்கிறேன் - முகமது ஷமி!
ஐசிசி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் நான்காவது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தனர். இதில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக சதம் விளாசினர்.
இதையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் அதிரடியாக விளையாடியது. ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் அவ்வளவுதான் என இந்திய ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், முகமது ஷமி வீசிய ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் விழுந்தது. இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இப்போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Related Cricket News on M mohammed
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் சதம் வீண்; முகமது ஷமி அபாரம் - இறுதிப்போட்டிகுள் நுழைந்தது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி சாதனை!
உலகக்கோப்பை தொடர்களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ...
-
இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!
தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றதால் நாக் அவுட்டில் தோற்று விடுவோமோ என்ற பயமான உணர்வை கொஞ்சமும் நினைக்காமல் தொடர்ந்து அடித்து நொறுக்கி வெற்றி காணுங்கள் என இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். ...
-
ஷமியின் அவுட்ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது கடினம் - கிளென் மேக்ஸ்வெல்!
ஷமியின் அவுட் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
முகமது ஷமி இதனை செய்தால் திருமணம் செய்துகொள்ள தயார் - பாயல் கோஷ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேக பந்துவீச்சாளர் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் வெளிப்படையாக அறிவித்துள்ளார். ...
-
முகமது ஷமிக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது - ஹாசின் ஜஹான்!
இந்திய அணி வீரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் முகமது ஷமிக்கு வாழ்த்து கூற முடியாது என ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் கூறியுள்ளார். ...
-
‘சர்ச்சை கருத்து’ - ஹசன் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி!
ஐசிசி புதிய பந்துகளை கொடுப்பதாலேயே இந்திய பவுலர்களால் இந்தளவுக்கு ஸ்விங் செய்ய முடிவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசான் ராஜாவின் கருத்துக்கு இந்திய வீரர் முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இந்திய அணியின் பவுலிங் அட்டாக் தான் மிகச்சிறந்த ஒன்று -ரிக்கி பாண்டிங்!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கால் எதிரணிகளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
2023 உலக கோப்பையின் சிறந்த பவுலர் அவர் தான் - பென் ஸ்டோக்ஸ் பாராட்டு!
இத்தொடரில் விளையாடி வரும் எதிரணிகளில் முகமது ஷமி இந்த உலகக் கோப்பையின் மிகச்சிறந்த பவுலராக செயல்பட்டு வருவதாக இங்கிலாந்தின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வெளிப்படையாக பாராட்டியுள்ளார். ...
-
இந்தியா இறக்கமற்ற அணியாக மாறியுள்ளது - சோயப் அக்தர்!
தற்போதைய நிலைமையில் இந்தியர்கள் தங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டாட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ...
-
பந்தை ஸ்விங் செய்வது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் கிடையாது - முகமது ஷமி
வெள்ளை பந்தில் சரியான லைன் மற்றும் லெந்தில் பிட்ச் செய்தால், நிச்சயம் ஸ்விங் கிடைக்கும். அதனால் இதில் ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் எல்லாம் இல்லை என முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி மிகவும் ஆபத்தானது - ரோஹித் சர்மா!
நாங்கள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளோம் என்பதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷமி மிரட்டல் பந்துவீச்சு; இலங்கையை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முதல் அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
இலங்கை பரிதாபம்; பும்ரா, சிராஜ், ஷமி அசத்தல்!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி வெறும் 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24