Mi vs pbks
ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்தேன் - ஹர்ப்ரீத் பிரார்!
ஐபிஎல் தொடரின் 17அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் போன்றோர் சோபிக்க தவறினாலும் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 77 ரன்களைச் சேர்த்தார். அதன்பின் இறுதியில் தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 10 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது
Related Cricket News on Mi vs pbks
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ரோஹித் சர்மா சாதனையை சமன்செய்த தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 20ஆவது ஓவரில் 10 ரன்களுக்கு மேல் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த வீரர்களில் ரோஹித் சர்மாவின் சாதனையை தினேஷ் கார்த்திக் சமன்செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: தினேஷ் கார்த்திக், விராட் கோலியை பாராட்டிய ஃபாஃப் டூ பிளெசிஸ்!
தினேஷ் கார்த்திக் இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத் தருவார் என்று தோன்றுகிறது. அவர் இந்த சீசனுக்கு தயாராகி விட்டார் என்று நினைப்பதாக ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - ஷிகர் தவான்!
நாங்கள் பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்ததும், விராட் கோலி கொடுத்த கேட்சை தவறவிட்டதும் போட்டியின் முடிவை மாற்றிவிட்டது என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: விரட் கோலி, தினேஷ் கார்த்திக் அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: அபாரமான கேட்ச் பிடித்த அனுஜ் ராவத்; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி வீரர் அனுஜ் ராவத் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங் அதிரடி ஃபினிஷிங்; ஆர்சிபி அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகம் எனக்கு தெரியாது - ஷிகர் தவான்!
இது புதிய மைதானம் என்பதால் இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகம் எனக்கு தெரியாது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
இஷாந்த் சர்மாவின் காயம் எங்கள் தோல்விக்கு காரணமாக மாறியது - ரிஷப் பந்த்!
இஷாந்த் சர்மாவின் காயம் எங்களுக்கு பின்னடைவாக மாறியது என நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் எங்களுடைய பேட்டிங்கின் காரணமாக ஏற்கனவே ஒரு பந்து வீச்சாளர் குறைவாக இருந்தோம் என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய இஷாந்த் சர்மா!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா களத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். ...
-
ஐபிஎல் 2024: சாம் கரண் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24