Prithvi shaw
ரஞ்சி கோப்பை: மும்பை அணியில் இடம்பிடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!
இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணி இளம் வீரர் பிருத்வி ஷா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். ரஞ்சி கோப்பைப் போட்டியில் எலைட் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை அணி, ஜனவரி 13 அன்று மஹாராஷ்டிரத்துக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது.
இதில் 22 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர், கடந்த வருடம் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணியில் இடம்பெற்றார். அர்ஜுன் விளையாடிய இரு ஆட்டங்களிலும் மும்பை அணிக்குத் தோல்வியே கிடைத்தன. ஹரியாணாவுக்கு எதிராக 1/34, புதுச்சேரிக்கு எதிராக 1/33 என சுமாராகவே பந்துவீசினார்.
இதன்பிறகு ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, அர்ஜுனை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஓர் ஆட்டத்திலும் விளையாட முடியாமல் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகப் பணியாற்றியுள்ள அர்ஜுன், இந்திய யு-19 அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
Related Cricket News on Prithvi shaw
-
ஐபிஎல் 2021: ஆர்சிபிக்கு 165 ரன்கள் இலக்கு!
ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து புறப்படும் பிரித்வி & சூர்யா - பிசிசிஐ
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிறப்பு அனுமதியுடன் இன்று இங்கிலாந்து புறப்படவுள்ளனர். ...
-
ENG vs IND : பிரித்வி, சூர்யா இங்கிலாந்து செல்வதில் நீடிக்கும் சிக்கல்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயத்தால் விலகிய வீரர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் இங்கிலாந்துக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ...
-
IND vs ENG : வாய்ப்பை இழக்கும் பிரித்வி, சூர்யா?
குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதியானதால் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர். ...
-
IND vs ENG : இந்திய அணியில் பிரித்வி, சூர்யா சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவார் - ஷிகர் தவான்
முதல் போட்டியில் சொதப்பிய பிரித்வி ஷா, அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
IND vs ENG: இங்கிலாந்து புறப்படும் பிரித்வி & சூர்யா!
இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
IND vs SL: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இலங்கை!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
-
IND vs SL, 2nd ODI: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. ...
-
SL vs IND, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவிலுள்ள பிரமதாச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. ...
-
IND vs SL : அதிரடியில் மிரட்டிய தாவான், இஷான் கிஷான், பிரித்வி ஷா; இலங்கையை பதம்பார்த்த இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன். ...
-
இந்திய அணிக்காக இத்தொடரை வெல்ல வேண்டும் - பிரித்வி ஷா
நீண்ட நாளைக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47