Sa vs ind
விராட் கோலியை ஏன் மீண்டும் கேப்டனாக நியமிக்க கூடாது - சுப்பிரமணியம் பத்ரிநாத்!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டும் இழந்துள்ள இந்தியா குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் தோல்விக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக 2ஆவது நாள் உணவு இடைவெளியில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய முதன்மை பவுலர்களை பயன்படுத்தாத ரோஹித் சர்மா தடுமாறிக் கொண்டிருந்த பிரசித் கிருஷ்ணா – சர்துல் தாக்கூர் ஆகியோரை பயன்படுத்தி சுமாராக கேப்டன்ஷிப் செய்ததும் தோல்விக்கு முக்கிய காரணமானது.
Related Cricket News on Sa vs ind
-
இன்னிங்ஸ் தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!
ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தோல்வியை சந்தித்தது பரவாயில்லை ஆனால் கொஞ்சம் கூட போராடாமல் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
நல்ல திறமை இருந்தும் இந்திய அணியால் குறைந்த வெற்றிகளையே பெற்றுள்ளது - மைக்கேல் வாகன்!
உலகிலேயே திறமைக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத போதிலும் இந்தியா மட்டுமே குறைவான சாதனை வெற்றிகளை பெற்று வருவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஷர்துல் தாகூர் ஒன்றும் சிறு குழந்தை இல்லை - ரவி சாஸ்திரி!
தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
இரண்டாவது டெஸ்ட்டில் அணியில் இடம்பிடிக்கும் ஜடேஜா?
இரண்டாவது போட்டியின் போது நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு முழு உடற்தகுதியுடனே இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
ரஹானே, புஜாரா இல்லாததே தோல்விக்கு காரணம் - ஹர்பஜன் சிங்!
சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்தக்கூடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை கழற்றி விட்டது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியில் ஆவேஷ் கான் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆவேஷ் கான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
இப்போதெல்லாம் 7 நாட்களுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது போல் அட்டவணை அமைக்கப்படுகிறது. அதனால் பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இந்திய அணிக்கு அபராதம்; புள்ளிப்பட்டியலில் பின்னடைவு!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவீதமும், 2 புள்ளிகளையும் அபராதமாக விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது. ...
-
சச்சின், சங்கக்காரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக முறை 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: முதலிடத்தைப் பிடித்த தென் ஆப்பிரிக்கா; இந்திய அணி சரிவு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி ஒரு டிரா ஆகியவற்றை பதிவு செய்துள்ள இந்தியா 16 புள்ளிகளை 44.44 சதவீதத்தில் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் 2025 புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது. ...
-
டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகல்; டீன் எல்கர் கேப்டனாக நியமனம்!
காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகியதை அடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இது ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸ் - டீன் எல்கர்!
பந்தை தாமதமாக அடிப்பதே தம்முடைய திட்டமாக வைத்திருந்தேன் என இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து ஆட்டநாயகன் விருதை வென்ற டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்வி வேதனையளிக்கிறது - ரோஹித் சர்மா!
விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் தான் என்பதால் இந்த தோல்வியை மறந்துவிட்டு அடுத்த போட்டிக்கு எங்களை தயார்படுத்தி கொள்வதில் கவனம் செலுத்துவோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
மூன்றாம் இடத்தில் தொடர்ந்து சொதப்பிய ஷுப்மன் கில்; ரசிகர்கள் விமர்சனம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றம் இடத்தில் களமிறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பிய ஷுப்மன் கில்லை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47