Sciver brunt
WPL 2025: ஹீலி மேத்யூஸ், அமெலியா கெர் அபாரம்; யுபி வாரியர்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரேஸ் ஹாரிச் மற்றும் ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின்கிரேஸ் ஹாரிஸ் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 28 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிரன் நவ்கிரே ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்ட, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜியா வோல் டபிள்யூபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Sciver brunt
-
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அபாரம்; வாரியர்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பந்து வீச சரியான வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்தோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
முதல் ஆறு ஓவர்கள் மிகவும் முக்கியமானவை. அதில் எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதில் பந்து வீச சரியான வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்தோம் என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அதிரடி; முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2025: குஜராத் ஜெய்ண்ட்ஸை 120 ரன்னில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பேட்டர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
நாங்கள் இறுதியில் எதிர்கொள்ளாமல் இருந்த ஐந்து பந்துகளும் எங்களுக்கு தோல்வியை பரிசளித்தது என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 165 ரன்கள் டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து 170 ரன்களில் ஆல் அவுட்; நிதானம் காட்டும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டடு. ...
-
SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 283 ரன்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 283 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
SAW vs ENGW, Only Test: பௌச்சர், நாட் ஸ்கைவர் சதம்; வலிமையான முன்னிலையில் இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: டேனியல் வையட், நாட் ஸ்கைவர் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47