Tests bumrah
இந்த போட்டி இவ்வளவு சீக்கிரமாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவு பெற்றது. ஏற்கனவே இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த வேளையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது. குறிப்பாக ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி இரண்டாம் நாள் ஆட்டமான இன்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை சமன் செய்தது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா முதல் இன்னிங்சில் 2 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். மேலும் அவர் ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியின் போது 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் இந்த டெஸ்டில் தொடரில் மட்டும் மொத்தம் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.
Related Cricket News on Tests bumrah
-
SA vs IND, 1st Test: டீன் எல்கர், மார்கோ ஜான்சென் அபார ஆட்டம்; 408 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது - மகாயா நிடினி!
ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் தற்போதைய இந்திய அணி இதே பலத்துடன் இருக்காது என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார். ...
-
நான் ஆல் ரவுண்டர் கிடையாது - ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தன்னை ஆல்ரவுண்டர் என்று இப்போதைக்கு அழைக்க முடியாது எனக் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: ரூட், பேர்ஸ்டோவ் அபார சதம்; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: பும்ராவை விமர்சித்த கெவின் பீட்டர்சன்!
ஜஸ்பிரித் பும்ராவின் முட்டாள்தனமான முடிவுகள் தான் இந்தியாவின் சரிவுக்கு காரணம் என கெவின் பீட்டர்சன் விளாசியுள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: அதிரடியில் மிரட்டும் பேர்ஸ்டோவ்; பந்துவீச்சாளர்கள் தடுமாற்றம்!
இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
தனது சாதனையை முறியடித்த பும்ராவுக்கு விண்டீஸ் லெஜண்ட் லாரா வாழ்த்து!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய பும்ரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் (35 ரன்கள்) விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: பந்துவீச்சிலும் மிரட்டும் பும்ரா; பாலோ ஆனை தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
யுவராஜ் சிங்கை பிராடுக்கு நியாபகப்படுத்திய ஜஸ்ப்ரீத் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா ஒரே ஓவரில் அதிக ரன்கள் விளாசி உலக சாதனை படைத்தார். ...
-
ENG vs IND: பவுலராக என் பணியை நான் சிறப்பாக செய்ய வேண்டும் - ஜஸ்ப்ரித் பும்ரா!
இது என் வாழ்நாளில் மிக பெரிய பெருமையான தருணம் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் புதிய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டிலிருந்து ரோஹித் சர்மா விலகியதையடுத்து, இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: இந்திய அணியை வழிநடத்தும் ஜஸ்ப்ரித் பும்ரா!
கரோனா காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இருந்து விலகியதை அடுத்து, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ...
-
IND vs SL, 2nd Test: மீண்டும் சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; இலங்கை தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற 447 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL, 2nd Test: இலங்கையை சுருட்டிய பும்ரா!
இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47