This indian
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் டு பிளெசிஸ், மேக்ஸ்வெல், க்ரீன் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஆனாலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடித்ததுடன், 77 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் கடைசி கடைசி ஓவரில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு ஆட்டம் சென்றதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பும் தொற்றிக்கொண்டது. பஞ்சாப் அணி தரப்பில் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து ஆர்சிபியின் வெற்றியும் உறுதியானது.
Related Cricket News on This indian
-
ஐபிஎல் 2024: ரோஹித் சர்மா சாதனையை சமன்செய்த தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 20ஆவது ஓவரில் 10 ரன்களுக்கு மேல் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த வீரர்களில் ரோஹித் சர்மாவின் சாதனையை தினேஷ் கார்த்திக் சமன்செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: தினேஷ் கார்த்திக், விராட் கோலியை பாராட்டிய ஃபாஃப் டூ பிளெசிஸ்!
தினேஷ் கார்த்திக் இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத் தருவார் என்று தோன்றுகிறது. அவர் இந்த சீசனுக்கு தயாராகி விட்டார் என்று நினைப்பதாக ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - ஷிகர் தவான்!
நாங்கள் பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்ததும், விராட் கோலி கொடுத்த கேட்சை தவறவிட்டதும் போட்டியின் முடிவை மாற்றிவிட்டது என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: விரட் கோலி, தினேஷ் கார்த்திக் அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: அபாரமான கேட்ச் பிடித்த அனுஜ் ராவத்; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி வீரர் அனுஜ் ராவத் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங் அதிரடி ஃபினிஷிங்; ஆர்சிபி அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சி முகாமில் இணைந்த ஆண்ட்ரிச் நோர்ட்ஜே!
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே இன்று சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: முழு தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு!
நடைபெற்று வரும் ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
மைதானத்தில் மோதிக்கொண்ட ரசிகர்கள்; வைரலாகும் காணொளி!
குஜராத் - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மைதானத்திலிருந்த ரசிகர்கள் மோதலில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ஹர்த்திக் பாண்டியாவிடம் கோபத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா; வைரலாகும் காணொளி!
குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் சக வீரர் ரோஹித் சர்மா கோபமாக பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஷார்ட் பந்துகளை விளையாட கடினமாக இருந்தது - ஷுப்மன் கில்!
இந்த போட்டியில் நாங்கள் எதிரணிக்கு அழுத்தத்தை உருவாக்கி அவர்கள் தவறு செய்யும் வரை காத்திருக்க விரும்பினோம் என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24