When south africa
அதிர்ஷ்டவசமாக ரன் ரேட் எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது - டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!
தென் ஆப்பிரிக்க - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி செயிண்ட் ஜியார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இதில் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றியும், அபிஷேக் சர்மா 4 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய திலக் வர்மா 20 ரன்களுக்கும், அக்ஸர் படேல் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங்கும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களைச் சேர்த்து அணியை ஓரளவு நல்ல ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது.
Related Cricket News on When south africa
-
பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் குறித்து பெருமைப்படுகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பந்துவீச்சாளர் 5 விக்கெட்டுகளை வீழ்த்து என்பது அற்புதமான விஷயம். இதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டியுள்ளார். ...
-
SA vs IND, 2nd T20I: ஸ்டப்ஸ், கோட்ஸி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அசத்தலான கேட்சைப் பிடித்து திலக் வர்மாவை வெளியேற்றிய டேவிட் மில்லர் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SA vs IND, 2nd T20I: பேட்டர்கள் சொதப்பல்; 124 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பாதிவில் பார்ப்போம். ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஹென்ரிச் கிளாசென்!
ஒரு ஆண்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை ஹென்ரிச் கிளாசென் படைத்துள்ளார். ...
-
எனது ஃபார்மை நான் தொடர விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!
எந்தவொரு தொடரையும் நீங்கள் இவ்வாறு தொடங்குவது முக்கியது. அதன்படி தொடரை வெற்றியுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடினார் - ஐடன் மார்க்ரம்!
இப்போட்டியில் நாங்கள் சிறந்த தொடக்கத்தை பெற தவறியதே எஙளது தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
இதுபோல் பயமற்ற கிரிக்கெட்டையே விளையாட விரும்புகிறொம் - சூர்யகுமார் யாதவ்!
சஞ்சு சாம்சன் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக உழைத்ததற்கான பலனை இன்று அனுபவித்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 1st T20I: சஞ்சு, வருண், பிஷ்னோய் அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்து சாதனைகளை குவித்த சஞ்சு சாம்சன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தனது பெயரில் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
SA vs IND, 1st T20I: சதமடித்து மிரட்டிய சஞ்சு சாம்சன்; தென் ஆப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபார சதத்தின் மூலம் 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24