Wi test
பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Pakistan vs Bangladesh 2nd Test Dream11 Prediction: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே வங்கதேச அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியானடி டிராவில் முடிவடைந்தாலும் வங்கதேச அணியானது தொடரை வென்று சாதனை படைக்கும். அதேசமயம், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
PAK vs BAN 2nd Test: போட்டி தகவல்கள்
Related Cricket News on Wi test
-
PAK vs BAN: சர்வதேச கிரிக்கெட் புதிய மைல் கைல்லை எட்டுவாரா பாபர் ஆசாம்?
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
கேப்டன்சி குறித்து ஜோ ரூட்டின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன்- ஒல்லி போப்!
இங்கிலாந்து கேப்டனாக மோசமான ஆட்டத்திறு பிறகு பேட்டிங் மற்றும் கேப்டன்சியின் தேவைகளை எவ்வாறு சமன் செய்வது என்பது குறித்த வழிகாட்டுதலை ஜோ ரூட்டிடம் கேட்டதாக ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிபெறுவது மிகவும் அவசியமான ஒன்று - தனஞ்செயா டி சில்வா!
இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SL, 2nd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; பதும் நிஷங்காவிற்கு இடம்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பின்னடைவை சந்தித்த பாபர் ஆசாம்; புரூக், முஷ்ஃபிக்கூர் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ள புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரவரிசையில் முஷ்ஃபிக்கூர் ரஹிம், முகமது ரிஸ்வான் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
இங்கிலாந்து vs இலங்கை, இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
கிறிஸ் கெயில், சந்தர்பால் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் விளையாடும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ENG vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ஒல்லி ஸ்டோனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த சஞ்சய் பங்கர்; ரூட், ஸ்மித்திற்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களைக் கொண்டு உருவாக்கிய உலக டெஸ்ட் லெவனை அறிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு அபராதம் விதித்த ஐசிசி!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இவ்விரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - சஞ்சய் பங்கர்!
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்பித்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
பாகிஸ்தனுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதற்காக கிடைத்த பரிசுத்தொகையை வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக முஷ்ஃபிக்கூர் ரஹிம் அறிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றியானது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
கடந்த 10-15 நாட்களில், நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். இந்த வெற்றியானது எங்களின் அனைத்து வீரர்களையும் சாரும் என வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்வி குறித்து நான் ஏதும் சாக்கு சொல்ல விரும்பவில்லை - ஷான் மசூத்!
இப்போட்டியில் நாங்கள் தவறு செய்துள்ளோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதனால் அடுத்து போட்டியில் இந்த தவறுகளை திருத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்லார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24