Advertisement
Advertisement

Wi vs sa 4th t20i

Star Indian pacer Bhuvneshwar Kumar needs 1 more wicket to achieve big milestone in T20I cricket
Image Source: Google

சாதனை நிகழ்த்த காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்!

By Bharathi Kannan June 17, 2022 • 16:03 PM View: 419

இந்தியா  - தென் ஆப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகளின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

இந்த தொடரில் புவனேஷ்வர் குமார் செம ஃபார்மில் அருமையாக பந்துவீசிவருகிறார். முதல் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய புவனேஷ்வர் குமார், 2வது போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமாரின் ஸ்விங்கை எதிர்கொள்ளமுடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறுகின்றனர்.

Related Cricket News on Wi vs sa 4th t20i