2023
டிஎன்பிஎல் 2023 எலிமினேட்டர்: மதுரையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெல்லை ராயல் கிங்ஸ்!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நெல்லை அணிக்கு அருண் கார்த்திக் - சூர்யபிரகாஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சூர்யபிரகாஷ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான அருண் கார்த்திக்கும் 18 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on 2023
-
விராட், ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து புறக்கணிக்கிறார்கள் என்பது புரியவில்லை - சவுரவ் கங்குலி!
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் டி20 போட்டிகளில் இடம் கொடுக்கப்படாததற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
எந்த மைதானத்தில் நடந்தாலும், அந்த மைதானத்தில் சிறப்பாக விளையாட இருக்கிறோம் - பாபர் ஆசாம்!
எந்த கிரிக்கெட் மைதானத்திலும் விளையாடி எந்த அணியையும் தோற்கடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2023 எலிமினேட்டர்: ராஜகோபால், அஜித்தேஷ் அதிரடி; மதுரை அணிக்கு இமாலய இலக்கு!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சவுரவ் கங்குலி!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND 1st Test: 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Ashes 2023, 3rd Test: இங்கிலாந்தை திணறவைத்த கம்மின்ஸ்; தடுமாற்றத்தில் ஆஸி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர்1: திண்டுகல்லை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது கோவை கிங்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பில் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர்1: சச்சின் அதிரடி; திண்டுக்கல்லுக்கு 194 டார்கெட்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
2007-இல் தந்தை;2023-இல் மகன் - உலகக்கோப்பை தொடரில் கலக்கும் டி லீட் குடும்பம்!
நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் பஸ் டி லீட் . இவரது தந்தையான டிம் டி லீட் நெதர்லாந்து அணிக்காக இதற்கு முன்பு விளையாடிய நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தமிம் இக்பால்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் நேற்று அறிவித்த நிலையில், இன்று (ஜூலை 7) தனது அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: தீக்ஷனா, நிஷங்கா அபாரம்; விண்டீஸை வீழ்த்தியது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும் - திலக் வர்மா!
ஒவ்வொரு நாள் இரவும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்குவது போல் கனவு காண்பேன் என்றும், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும் என்று திலக் வர்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; மார்க் வுட் அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. ...
-
ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும் விராட் கோலி; பயிற்சி போட்டியில் சொதப்பல்!
இந்திய வீரர்களுக்கு இடையே நடைபெற்றுவரும் பயிற்சி போட்டியில் உனாத்கட் பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47