2023
CWC 2023 Qualifiers: நேபாளத்தை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது விண்டீஸ்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை களமிறங்கினர். இதில் கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங்கும் 310 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து சதங்களை விளாச அணியின் ஸ்கோரும் 250 ரன்களைத் தாண்டியது.
Related Cricket News on 2023
-
CWC 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டத்தால் அமெரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து!
அமெரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பேர்ஸ்டோவ் டென்னிஸ் பந்தில் பயிற்சி செய்ய வேண்டும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
ஜானி பேர்ஸ்டோவ் டென்னிஸ் பந்தைக் கொண்டு பயிற்சி செய்வதன் மூலம் மீண்டும் அவரது கீப்பிங் திறனை மேம்படுத்த உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். ...
-
மொயின் அலியை சேர்த்ததே இங்கிலாந்தின் தோல்விக்கான காரணம் - இயன் சேப்பல்!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்தான தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான இயன் சேப்பல் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிஸ்டர் கூல் இவர்தான் - விரேந்திர சேவாக்!
பாட் கம்மின்ஸ் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மிஸ்டர் கூல் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார். ...
-
எங்கள் வீரர்கள் தொடர்ந்து பாஸ்பால் முறையில்தான் உறுதியாக விளையாடுவார்கள் - பிராண்டன் மெக்கல்லம்!
எதிரணி எதற்கெல்லாம் அழுத்தத்திற்கு போகுமோ, அந்த வாய்ப்பை எல்லாம் நாங்கள் பயன்படுத்தி வெல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். ...
-
CWC 2023: அமெரிக்காவை 211 ரன்களில் கட்டுப்படுத்தியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023: ஹோப், பூரன் அபார சதம்; நேபாளுக்கு 340 டார்கெட்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலிய அணியை போன்று இந்திய கிரிக்கெட் அணியும், சீனியர் வீரர்களை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஒல்லி ராபின்சனை எச்சரித்த போட்டி நடுவர்?
ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட ஒல்லி ராபின்சன்னிற்கு போட்டி நடுவர் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: சுஜய் அதிரடியில் அடுத்த வெற்றியைப் பதிவுசெய்த கோவை!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!
தங்களுக்கான போட்டி மைதானங்களை மாற்றுமாறு பகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வைத்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: திருச்சியை 117 ரன்களில் சுருட்டியது கோவை!
கோவை அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 118 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை கடைசி பந்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்த் த்ரில் வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அமீரகத்தை வீழ்த்தியது ஓமன்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24