Advertisement
Advertisement
Advertisement

2024

வங்கதேச டெஸ்ட் போட்டி; சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள்!
Image Source: Google
Advertisement

வங்கதேச டெஸ்ட் போட்டி; சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள்!

By Bharathi Kannan September 13, 2024 • 09:30 AM View: 78

இந்தியாவில் சுற்றூப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

Related Cricket News on 2024