aiden markram
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐடன் மார்க்ரம் ஒருபக்கம் நிதானமாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மேற்கொண்டு 27 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on aiden markram
-
ஐபிஎல் 2025: மார்ஷ், மார்க்ரம் அரைசதம்; மும்பை அணிக்கு 204 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாகத் தகவமைத்துக் கொண்டனர் - ஐடன் மார்க்ரம்!
இந்த போட்டிக்கான மைதானம் தொடக்கத்தில் மெதுவாக இருந்தது, ஆனால் எங்கள் வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாகத் தகவமைத்துக் கொண்டனர் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பேட்டர்கள் அசத்தல்; 315 ரன்களைக் குவித்தது தென் ஆப்பிரிக்கா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 316 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025 எலிமினேட்டர்: மார்க்ரம் அரைசதம்; சூப்பர் கிங்ஸுக்கு 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸுக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: மார்க்ரம், ஜான்சன், டௌசன் அபாரம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: மார்க்ரம், டௌசன் அதிரடியால் சரிவிலிருந்து மீண்ட சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியஸ், ரூட் அசத்தல்; சன்ரைசர்ஸை பந்தாடியது ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: மார்க்ரம் அதிரடியில் 175 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதித்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: எளிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்; தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 148 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24