delhi capitals
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த ரிஷப் பந்த்!
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இந்த அணியில் டி காக் 19 ரன்களையும், கேஎல் ராகுல் 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னி, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய குர்னால் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் எட்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஆயூஷ் பதோனி அர்ஷத் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
Related Cricket News on delhi capitals
-
ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக லிசாத் வில்லியம்ஸை தேர்வு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக லிசாத் வில்லியம்ஸை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிடும் மிட்செல் மார்ஷ்; உறுதிசெய்த சௌரவ் கங்குலி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக ஒருசில போட்டிகளை தவறவிடுவார் என அந்த அணியின் ஆலோசகர் சௌரவ் கங்குலி உறுதிசெய்துள்ளார். ...
-
காயத்தால் அவதிபடும் குல்தீப் யாதவ்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பின்னடைவு!
காயம் காரணமாக ஓய்வில் இருந்துவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் குல்தீப் யாதவ், மேலும் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சி முகாமில் இணைந்த ஆண்ட்ரிச் நோர்ட்ஜே!
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே இன்று சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய இஷாந்த் சர்மா!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா களத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். ...
-
நடுக்கம், பதட்டம், உற்சாகம் இவை அனைத்தும் உள்ளது - ரிஷப் பந்த்!
தொழில்முறை கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது முதல் ஆட்டத்தை நாளை விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
கார் விபத்தில் சிக்கி காயத்திலிருந்து மீண்டு நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடும் இந்திய வீரர் ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஓர் பார்வை!
ரிஷப் பந்த் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மெக்குர்க்கை தேர்வு செய்த டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த லுங்கி இங்கிடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதை அடுத்து அவருக்கு மாற்றாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கை அந்த அணி ஒப்பந்தம் செய்தது. ...
-
குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை - ஹாரி ப்ரூக் விளக்கம்!
கடந்த சில ஆண்டுகளாக, எனது மனநலம் மற்றும் எனது குடும்ப நலனுக்கு முன்னுரிமை அளிக்கக் கற்றுக்கொண்டேன், உண்மையாகச் சொல்வதானால், குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை என ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கான மாற்று வீரர் யார்? குழப்பத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!
ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக அந்த அணி எந்த வீரரைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
வரவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஹாரி ப்ரூக் அறிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த கடுமையான சூழலில் இருந்து மீண்டு வந்துள்ளார் - ஷிகர் தவான்!
கடினமான சூழலில் இருந்து தனது பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் நேர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றால் ரிஷப் பந்த் மீண்டு வந்துள்ளதாக இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் - பிசிசிஐ!
ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24