heinrich klaasen
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ஷாபாஸ், அபிஷேக் சுழலில் வீழ்ந்தது ராஜஸ்தான்; இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியுள்ள நிலையில், இரண்டாவதாக எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பவுண்டரி சிக்ஸருடன் தொடங்கிய அபிஷேக் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளாக விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
Related Cricket News on heinrich klaasen
-
சந்தீப் சர்மாவின் அசத்தலான யார்க்கரில் க்ளீன் போல்டான கிளாசென் - வரைலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2: கிளாசென் அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: அபிஷேக், கிளாசென் அதிரடியில் பஞ்சாப்பை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் & அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இதுபோன்ற போட்டிகளில் நான் ஒரு பேட்டராக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன் - பாட் கம்மின்ஸ்!
இதுபோன்ற போன்ற போட்டிகளில் ஒரு ஓவருக்கு 7 அல்லது 8 ரன்களை விட்டுக் கொடுத்தால் கூட மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் கொடுக்க முடியும் என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக்; ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த கிளாசென்; வைரல் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் அடித்த 106 மீட்டர் தூர சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: வரலாற்று சாதனையுடன் மேலும் சில சாதனைகளை குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த அணி எனும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டிராவிஸ் ஹெட் சதம், கிளாசென் அரைசதம்; புதிய வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து சாதனை படைத்தது. ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா போராட்டம் வீண்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
அபாரமான ஸ்டம்பிங் செய்து மிரட்டிய ஹென்ரிச் கிளாசென் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் செய்த அபாரமான ஸ்டம்பிங் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: நடத்தை விதிகளை மீறியதாக ஹர்ஷித் ரானாவுக்கு அபராதம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா நடத்தை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஹென்ரிச் கிளாசென் போராட்டம் வீண்; சன்ரைசர்ஸை வீழ்த்தி கேகேஆர் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24