Advertisement
Advertisement

indw vs saw

INDW vs SAW, Test: ஃபாலோ ஆனில் தோல்வியைத் தவிர்க்க போராடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
Image Source: Google
Advertisement

INDW vs SAW, Test: ஃபாலோ ஆனில் தோல்வியைத் தவிர்க்க போராடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!

By Bharathi Kannan June 30, 2024 • 20:14 PM View: 23

இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஷஃபாலி வர்மாவின் இரட்டை சதம் மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் மூலம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்களை குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறித்தது.  இதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 205 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 149 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் டெல்மி டக்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மரிஸான் கேப் 69 ரன்களுடனும், நதின் டி கிளார்க் 27 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மரிஸான் கேப் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சினலோ ஜஃப்டா, அன்னெரி டெர்க்சன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

Related Cricket News on indw vs saw

Advertisement