team india
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லா அரசன்..!#HappyBirthdayMSDhoni
கடந்த 2019, ஜூலை 11ஆம் தேதி இங்கிலாந்தின் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி. மழையின் காரணமாக இரண்டாவது நாளாக தொடர்ந்த ஒருநாள் போட்டி. இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டும். தோனி களத்தில் இருக்கிறார். அடுத்த ஓவரை வீச நியூசிலாந்து அணியின் ஃபெர்குசன் அழைக்கப்பட்டார். முதல் பந்தில் தோனியின் ஆஸ்தான ட்ரேட்மார்க் ஷாட்டான பேக்வார்டு பாய்ண்ட் திசையில் சிக்சர். 11 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அடுத்த பந்து யார்க்கர். ரன்கள் ஏதும் இல்லை. அந்த ஓவரின் மூன்றாவது பந்து, ஸ்கொயரில் தட்டிவிட்டு தோனியின் கால்கள் வேகம் எடுக்கின்றன. முதல் ரன்னை முடித்துவிட்டு, இரண்டாவது ரன்னுக்காக ஓடி வரும் போது, கப்தில் சரியாக ஸ்டெம்புகளில் டைரக்ட் ஹிட் அடிக்கிறார்.
பொதுவாக எவ்வித சலனமும் இல்லாமல் தோனியின் முகம் காணப்படும். ஆனால் அன்று, மூன்றாவது நடுவரின் தீர்ப்பைப் பார்த்ததும் தலை குனிந்தவாறு களத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறுகிறார். இந்தியாவுக்கே அன்று ஹார்ட் அட்டாக் தான். உலகக்கோப்பைக் கனவு பறிபோனது. கமெண்ட்ரியில் ”இது நிஜம் தானா...தோனி கடைசியாக மைதானத்தை விட்டு வெளியேறுகிறாரா?” எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மைதானத்தில் இருந்த அனைவரும் தோனிக்காக எழுந்து நின்று கரகோஷம் எழுப்புகின்றனர்.
Related Cricket News on team india
-
அவர் மீண்டும் பந்துவீசுவது சிறப்பானது - ஹர்திக் குறித்து சூர்யகுமார் யாதவ்!
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து மீண்டு மீண்டும் பந்துவீசுவதை பார்க்க நன்றாக உள்ளது என சக அணி வீரர் சூர்யகுமார் யதாவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: ரணதுங்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெர்வித்த கனேரியா!
இந்திய அணி குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனேஷ் கனேரியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: நூறு விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை நேரில் காண மைதானத்தில் நூறு விழுக்காடு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பையில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மண்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டை ஆளும் மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகையிலான சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட்டின் ‘டர்பனேட்டர்’ #happybirthdayharbhajansingh
இந்திய கிரிக்கெட் அணியின் பல தனித்துவமான சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஹர்பஜன் சிங் இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ...
-
புஜாராவுக்கான மாற்று வீரர் இவர்தான் - பிராட் ஹாக்
டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவுக்கு சரியான மாற்று வீரர் யார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐ கோரிக்கையை ஏற்ற இசிபி - ரசிகர்கள் மகிழ்ச்சி!
பயிற்சி போட்டிகளை நடத்தக்கோரி பிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ...
-
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சாடும் முன்னாள் கேப்டன் ரணதுங்கா!
இந்தியா தங்கள் ஏ அணியை இலங்கைக்கு அனுப்பி இலங்கை கிரிக்கெட்டை அவமானப்படுத்திவிட்டதாக இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா விமர்சித்துள்ளார். ...
-
டிராவிட்டை முழு நேர பயிற்சியாளராக மாற்ற வேண்டும் - முன்னாள் வீரரின் ஆலோசனை!
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வேண்டுமென்று முன்னாள் ஆல்ரவுண்டர் ரீதிந்தர் சோதி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தொடக்க வீரராக தேர்வாகும் அளவிற்கு அபிமன்யு ஈஸ்வரன் என்ன செய்துள்ளார்? - ஓர் அலசல் !
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த தொடக்க வீரர் தேர்வாகப் பார்க்கப்படும் அபிமன்யு ஈஸ்வரன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு. ...
-
இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் சுப்மன் கில்?
இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
போட்டியின் போது காயமடைந்த இஷாந்த் சர்மா; மருத்துவமனையில் அனுமதி!
இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் விரலில் காயம் ஏற்பட்டு, 3 தையல் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
#Onthisday: விண்டிஸை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24