20 2025
ரஞ்சி கோப்பை 2025: முன்னிலை நோக்கி நகரும் குஜராத் அணி!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதல் அரையிறுதி போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேரளா அணி முதல் இன்னிங்ஸில் 457 ரன்களைக் குவித்த நிலையில் ஆல் அவுட்டனது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது அசாருதீன் 20 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 177 ரன்களையும், கேப்டன் சச்சின் பேசி 69 ரன்களையும், சல்மான் நிஷார் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். குஜராத் அணி தரப்பில் நாக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகளையும், கேப்டன் சிந்தன் கஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் அணிக்கு பிரியங்க் பாஞ்சல் - ஆர்யா தேசாய் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on 20 2025
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஷமி!
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பாற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தாவ்ஹித் ஹ்ரிடோய் அபார சதம; இந்திய அணிக்கு 229 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நிச்சயமாக மீண்டும் வலுவாக திரும்பி வருவேன் - ஃபகர் ஸமான்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியது ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவால் ஹாட்ரிக்கை தவறவிட்ட அக்ஸர் படேல்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
CT 2025: தொடரில் இருந்து விலகிய ஃபகர் ஸமான்; மாற்று வீரரை அறிவித்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக இமாம் உல் ஹக்கை மாற்று வீரராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசம் vs இந்தியா - உத்தேச லெவன்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
டெத் ஓவர்களில் அதிக ரன்களை பெற முடிந்ததில் மகிழ்ச்சி - மிட்செல் சான்ட்னர்!
தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசியது ஆனால் நடுபகுதியில் வில் யங் மற்றும் டாம் லேதம் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி எங்களை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
டெத் ஓவர்களில் எங்கள் செயல்திறன் சிறப்பாக இல்லை - முகமது ரிஸ்வான்!
நாங்கள் டெத் பந்துவீச்சில் சொதப்பியதும், பேட்டிங்கில் சரியான தொடக்கத்தை பெறாததும் எங்களின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது என பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேச vs இந்தியா - புள்ளி விரங்கள்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் புள்ளி விவரம் மற்றும் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ரஞ்சி கோப்பை 2025: மும்பைக்கு எதிராக வலிமையான முன்னிலையில் விதர்பா அணி!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 260 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
அபாரமான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த பிலீப்ஸ் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலீப்ஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: கேரளா அணி 457 ரன்களில் ஆல் அவுட்; ரன் குவிப்பில் குஜராத் அணி!
கேரளா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைக் குவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47