Arshdeep singh
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பிரப்ஷிம்ரன் சிங் அதிரடியில் மும்பையை பந்தாடியது பஞ்சாப்!
நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்படி, அங்கிரிஷ் ரகுவன்ஷி ஒரு ரன்னிலும், ஹர்திக் தோமர் ரன்கள் ஏதுமின்றியும், ஆயூஷ் மத்ரே 7 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றியும், ஷிவம் தூபே 17 ரன்களிலும் என வரிசையாக சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் மும்பை அணி 61 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்தது. பின் ஜோடி சேர்ந்த சூர்யன்ஷ் ஷெட்ஜ் மற்றும் அதர்வா அன்கொல்கர் இணை பொறுபுடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Arshdeep singh
-
SA vs IND, 4th T20I: சஞ்சு, திலக், அர்ஷ்தீப் அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புவனேஷ்வர், பும்ரா சாதனைகளை முறியடித்த அர்ஷ்தீப் சிங்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
SA vs IND, 3rd T20I: ஜான்சன், கிளாசென் போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. ...
-
பும்ரா, புவனேஷ்வர் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் அர்ஷ்தீப் சிங் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசி சாதனை படைத்த மயங்க் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசிய மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை மயங்க் யாதவ் படைத்துள்ளார். ...
-
IND vs BAN, 1st T20I: வருண், அர்ஷ்தீப் அபாரம்; வங்கதேசத்தை 127 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு; மாற்று வீரருக்கான கடும் போட்டியில் அர்ஷ்தீப் , கலீல்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும், மாற்று வீரருக்கான தேர்வில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரிடையே போட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு...அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணி!
பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணியானது இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உங்கள் ஷாட்களை விளையாடக்கூடிய இடம் இதுவல்ல - ரோஹித் சர்மா!
நாங்கள் சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியில் பின்னடைவை சந்தித்தோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: இந்திய அணியில் இடம்பிடிக்கும் அர்ஷ்தீப் சிங்?
எதிர்வரவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எங்களை குறை சொல்லும் முன் உங்கள் வரலாற்றை திரும்பி பாருங்கள் - இன்ஸாமாம் கருத்துக்கு முகமது ஷமி பதிலடி!
பந்தை சேதப்படுத்தியதில் தங்கள் வீரர்கள் சிக்கிய முந்தைய சம்பவங்களை அவர்கள் நினைவில் வைத்து பேச வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக்கிற்கு முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
ரிவர்ஸ் ஸ்விங் குறித்து நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை - இன்ஸமாம் உல் ஹக் காட்டம்!
பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதை உலகுக்கு சொல்லிக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என ரோஹித் சர்மாவிற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக் பதில் கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
இங்கு இல்லை என்றால் வேறு எங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்? - இன்ஸமாம் குற்றச்சாட்டிற்கு ரோஹித் பதிலடி!
நாங்கள் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை. இங்கே, உள்ள மைதானங்களில் 12-15 ஓவர்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என இன்ஸமாம் உல் ஹக்கின் குற்றச்சாட்டிற்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24