Cricket
WPL 2024: ஷஃபாலி வர்மா, மெக் லெனிங் அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய யுபி அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - வ்ருந்தா தினேஷ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் வ்ருந்தா அரவிந்த் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீராங்கனை தஹ்லியா மெக்ராத்தும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் அலிசா ஹீலியும் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, யுபி அணி 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த கிரேஸ் ஹாரிஸ் - ஸ்வேதா ஷெராவத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கிரேஸ் ஹாரிஸ் 17 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கிரண் நவ்கிரே 10 ரன்களுக்கும், பூனம் கெமார் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Cricket
-
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய பாபர் ஆசாம்; இஸ்லாமாபாத் அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பாபர் ஆசாமின் அதிரடியான சதத்தின் மூலம் பெஷாவர் ஸால்மி அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸை 119 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 120 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜுரெல் களத்திற்கு வந்தவுடனே அழுத்தத்தை குறைத்தார் - ஷுப்மன் கில்!
நான் துருவ் ஜூரலிடம், முதல் இன்னிங்ஸில் நீ நன்றாக விளையாடினாய், அதே போன்றே அதே மனநிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிலும் விளையாடுமாறு கூறினேன் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு!
அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும் - துருவ் ஜுரெல்!
சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும், அதனையே நானும் இப்போட்டியில் செய்தேன் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
இந்தத் தொடர் எங்களுக்கும் இந்தியாவுக்கும் நிறைய திறமையான இளம் வீரர்களை அடையாளப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்கூறியுள்ளார். ...
-
இத்தொடரில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த இளம் வீரர்களை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் ஹாரிஸ் ராவுஃப்!
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் காயம் காரணமாக நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் சமன்செய்துள்ளார். ...
-
IND vs ENG, 4th Test: ஷுப்மன், ஜுரெல் சிறப்பான ஆட்டம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ...
-
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா!
மும்பையில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான டிஒய் பாட்டில் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா ரிலையன்ஸ் ஒன் அணியின் கேப்டானக செயல்படவுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: வேண்டர் டுசென் சதம் வீண்; லாகூரை வீழ்த்தி பெஷாவர் த்ரில் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
4th Test Day 4: வெற்றிக்கு அருகில் இந்தியா; தோல்வியைத் தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இன்னும் 74 ரன்கள் தேவைப்படுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47