Cricket
இங்கிலாந்து கவுண்டி அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
தமிழக அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் விளையாடிய இவர் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக அறிமுகமாகி ரசிகர்களால் அறியப்பட்டவர். 2022-23 ஆண்டிற்கான விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எட்டு போட்டிகளில் விளையாடி 610 ரன்கள் குவித்தார். மேலும் அந்தப் போட்டி தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றார் . இதில் மூன்று சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.
இதனைத் தொடர்ந்து தமிழக அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். பின் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 96 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 507 ரன்கள் குவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய இவர் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் எடுத்தார்.
Related Cricket News on Cricket
-
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பிசிசிஐ ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது வியாகாம் 18!
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ...
-
BAN vs SL, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
மூத்த வீரர்கள் இல்லாதது வங்கதேச அணிக்கு மிகப் பெரிய இழப்பு - ஷாகிப் அல் ஹசன்!
மூத்த வீரர்கள் இல்லாதது வங்கதேச அணிக்கு மிகப் பெரிய இழப்பு என அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் இந்த வீரர் தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - ஜாக் காலிஸ்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார் என்று ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பாபர், ரிஸ்வான் ஆகியோரின் மூலம் பாகிஸ்தான் அசுர வளர்ச்சியடைந்துள்ளது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி வேறு மாதிரி மாறி இருக்கிறது. அதற்கு அந்த அணி வீரர்கள் அனைத்து லீக் தொடர்களிலும் விளையாடுவது தான் காரணம் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரை தவறவிடும் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்?
வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் எபோடட் ஹொசைன் காயம் காரணமாக இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தவறவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: வங்கதேச அணியிலிருந்து வெளியேறிய லிட்டன் தாஸ்!
ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் வைரஸ் காய்ச்சல் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். ...
-
ஒருநாள் போட்டிகள் எப்போதும் சவாலானது - விராட் கோலி!
ஒருநாள் போட்டிகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஒருசில வீரர்களை விளையாட வைக்க முயற்சித்தும் அவர்கள் காயமடைந்து வெளியேறினர் - ராகுல் டிராவிட்!
கடந்த 18 மாதங்களில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோரை விளையாட வைக்க முயற்சித்தும் அவர்கள் காயமடைந்து வெளியேறியதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
தோனி சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கி கோலியிடம் கொடுத்தார் - இஷாந்த் சர்மா!
பந்துவீச்சாளர்களை சிறப்பாக உருவாக்கி ஒரு முழுமையான அணியை விராட் கோலியிடம், மகேந்திர சிங் தோனி ஒப்படைத்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நாளை டர்பனில் நடைபெறவுள்ளது. ...
-
PAK vs NEP, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்!
இது வினோதமான கேப்டன்சியாக இருக்கிறது. யாரை எங்கு வேண்டுமானால் பேட்டிங் செய்ய சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடவுள்ள நடப்பு சாம்பியன் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47