Cricket news india
அண்டர் 19 டெஸ்ட்: ஆயூஷ் மாத்ரே அசத்தல்; இங்கிலாந்து - இந்தியா போட்டி டிரா!
இந்திய அண்டர்19 அணி இங்கிலாந்தில் சுற்றுயணம் செய்து தற்சமயம் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செல்ம்ஸ்ஃபோர்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி எகான்ஷ் சிங் சதமடித்ததுடன் 117 ரன்களையும், கேப்டன் தாமஸ் ரீவ் 59 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற அந்த அணி முதல் இன்னிங்ஸில் 309 ரன்களைச் சேர்த்தது ஆல் ஆவுட்டானது. இந்திய அணி தரப்பில் நமன் புஷ்பக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 279 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Related Cricket News on Cricket news india
-
சதமடித்து சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் சாதனையை ஹர்மன்ப்ரித் கவுர் சமன்செய்துள்ளார். ...
-
ENGW vs WIW, 3rd ODI: ஹர்மன்ப்ரீத் கவுர், கிராந்தி கவுட் அபாரம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENGW vs WIW, 3rd ODI: ஹர்மன்ப்ரீத் கவுர் அசத்தல் சதம்; இங்கிலாந்துக்கு 319 டார்கெட்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 319 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் விளையாடவில்லை என்றால், அவரிடத்தில் அன்ஷுல் காம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்யலாம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது நல்லதல்ல - மனோஜ் திவாரி விமர்சனம்!
கேப்டன் கில் நடந்து கொள்ளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த ஆட்டத்தில் அவர் விராட் கோலியைப் பின்பற்ற முயற்சித்தார் என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். ...
-
தொடரிலிருந்து விலகிய நிதிஷ்; அன்ஷுல் கம்போஜிற்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
வாசிம் அக்ரம், முரளிதரன் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ENG vs IND: டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் நிதிஷ் ரெட்டி; இந்திய அணிக்கு பின்னடைவு!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்தியாவை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து மகளிர் அணி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தங்கள் மண்ணில் அதிக போட்டிகளில் வென்ற சாதனையை இங்கிலாந்து மகளிர் அணி படைத்துள்ளது. ...
-
ENGW vs INDW, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்த இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs IND: காயத்தால் அவதிப்படும் அர்ஷ்தீப் சிங்; பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்தியா - இங்கிலாந்து ஒருகிணைந்த லெவனை தேர்வு செய்த புஜாரா!
ஒருகிணைந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ள புஜாரா, இந்த அணியில் சச்சின், தோனி, ஆண்டர்சன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் சில சாதனைகளைப் படைக்கவுள்ளார். ...
-
கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - தீப் தாஸ்குப்தா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47