Cricket series
முத்தரப்பு டி20 தொடர்: இந்தியா - தென் ஆப்பிரிக்க போட்டி மழையால் ரத்து!
தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய மகளிருக்கான முத்தரப்பு டி20 தொடர் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முடிகிறது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5ஆவது போட்டி நேற்று ஈஸ்ட் லண்டனில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். 2 ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், பலத்த மழை பெய்தது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கப்பட்ட போட்டியின் போது தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்த நிலையில், இரவு 9.25 மணிக்கு போட்டி கைவிடப்பட்டதாக போட்டி நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on Cricket series
-
Womens T20I Tri-Series: ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத் அதிரடியில் இந்திய அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
Womens T20I Tri-Series: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை, தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் டி20 உலகக்கோப்பை மற்றும் முத்தரப்பு தொடர்களில் பங்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்டிலிருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்!
காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஆஷஸ் 2021: ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி சேர்ப்பு!
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாலியல் புகார்; காலவரையற்ற ஓய்வை அறிவித்த டிம் பெயின்!
பாலியல் புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின், காலவரையற்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ், துணைக்கேப்டனாக ஸ்டிவ் ஸ்மித்தும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஸி கேப்டனாக இவரை நியமிக்கலாம் - ஆடம் கில்கிறிஸ்ட் நம்பிக்கை!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸை நியமிக்கலாம் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து கூறியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான் - ஷேன் வார்னே நம்பிக்கை!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து டிம் பெய்ன் விலகியதையடுத்து, புதிய கேப்டனாக யாரை நியமிக்க வேண்டும் என்று ஷேன் வார்ன் கருத்து கூறியுள்ளார். ...
-
மீண்டும் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித் - தகவல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஷஸ் தொடரில் மார்கஸ் ஹாரிஸ் தொடக்க வீரராக களமிறங்குவார் - ஜார்ஜ் பெய்லி!
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் களமிறங்கப்போகும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரை தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி அறிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய 4-0 என்ற கணக்கில் வெல்லும் - டேவிட் வார்னர்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் கம்பேக் கொடுத்த ஸ்டோக்ஸ்!
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
காயம் காரணமாக முக்கிய தொடர்களை இழக்கும் ஆர்ச்சர்; இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47