For new zealand
நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவில்லை - டாம் லேதம்!
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு, 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இந்தூரில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 101, ஷுப்மன் கில் 112 இருவரும் சிறந்த துவக்கத்தை தந்தார்கள். அடுத்து, ஹார்திக் பாண்டியா 54 அரை சதம் கடந்தார். மேலும், விராட் கோலி 36, ஷர்தூல் தாகூர் 25 போன்றவர்களும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 50 ஓவர்களில் 385/9 ரன்களை குவித்து அசத்தியது.
Related Cricket News on For new zealand
-
IND vs NZ: டி20 தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் திடீரென விலகல்!
நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் ருதுராஜ் கெயிக்வாட் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து கொடுத்தனர் - ரோஹித் சர்மா!
அனைவரும் சொல்வதை போன்று ஷர்துல் தாகூர் ஒரு மேஜிசியனை போன்றவர் தான். தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர் தொடர்ந்து சரியாக பயன்படுத்தி வருகிறார் என்று ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
IND vs NZ, 3rd ODI: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. ...
-
பாபர் ஆசாமின் சாதனையை சமன்செய்து ஷுப்மன் கில் உலக சாதனை!
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் சுப்மன் கில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் உலக சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். ...
-
IND vs NZ, 3rd ODI: ரோஹித், கில் அதிரடி சதம்; நியூசிலாந்துக்கு 386 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரது அபாரமான சதங்கள் மூலம் 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ, 3rd ODI: அடுத்தடுத்து சதங்களை விளாசிய ரோஹித், கில்; இமாலய இலக்கை நோக்கி இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே அபாரமாக ஆடி சதமடிக்க, இந்திய அணி மெகா ஸ்கோரை நோக்கி நகர்ந்து வருகிறது. ...
-
நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs நியூசிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை இந்தூரில் நடைபெறுகிறது. ...
-
விளையாட்டாக செய்த காரியத்தால் இஷான் கிஷானிற்கு ஏற்பட்ட சிக்கல்!
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷானுக்கு 4 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பிரச்சனை இதுதான் - ரமீஸ் ராஜா!
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs NZ: உம்ரான் மாலிக்கை பாராட்டிய முகமது ஷமி!
உம்ரான் மாலிக் கற்றுக் கொடுத்தாலும் வராத அதிரடியான வேகத்தை இயற்கையாகவே கொண்டுள்ள நீங்கள் நல்ல லைன், லென்த்தில் கவனம் செலுத்தினால் யாராலும் உங்களை தொட முடியாது முகமது ஷமி ஆலோசனை கொடுத்தார் ...
-
ஐசிசி தரவரிசை: முதலிடத்தை இழந்தது நியூசிலாந்து!
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்து தரவரிசை பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளது. ...
-
பேட்டிங்கில் நாங்கள் மிக மோசமாக செயல்பட்டுவிட்டோம் - டாம் லேதம்!
இந்திய அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டனான டாம் லதாம், ஆடுகளத்திற்கு ஏற்றவாறு விளையாடாததே தங்களது படுதோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 2nd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24