For pakistan
ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்சர் அடித்த முகமது வாசீம்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 26ஆவது லீக் போட்டி தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் கடைசி போட்டி இதுவாகும். இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரராக களமிறங்கிய அப்துல்லா ஷபீக் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். இதில், ரிஸ்வான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரிஸ்வான் 13 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 2000 ரன்களை கடந்துள்ளார். அடுத்து வந்த இஃப்திகார் அகமது 21 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து பாபர் ஆசாம் 3ஆவது முறையாக அரைசதம் அடித்தார்.
அதன்பின் இறுதியாக பாபர் அசாம் 65 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஷதாப் கான் மற்றும் சவுத் சகீல் இருவரும் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். மேலும், இருவரும் நிதானமாக விளையாடியதன் மூலமாக பாகிஸ்தான் 200 ரன்களை கடந்தது. இதில் ஷதாப் கான் 43 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து சவுத் சகீல் 52 ரன்களில் வெளியேறினார்.
Related Cricket News on For pakistan
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாபர் ஆசாம், சௌத் ஷகில் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 271 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 271 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தன்னை மதமாற்றம் செய்ய ஷாஹித் அஃப்ரிடி வற்புறுத்தினார் - டேனிஷ் கனேரியா!
பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய போது தன்னை மதமாற்றம் செய்ய ஷாஹித் அஃப்ரிடி வற்புறுத்தியதாக முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இது பாகிஸ்தான் அணியே கிடையாது - கண்ணீர் விட்ட வக்கார் யூனிஸ்!
பாகிஸ்தானின் இன்றைய செயல்பாடுகளை பார்த்து நான் வருத்தமடைகிறேன். இது எனக்கு தெரிந்த பாகிஸ்தான் கிடையாது என அந்த அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு நாளைக்கு எட்டு கிலோ கறி? பாகிஸ்தான் வீரர்களை கடுமையா விளாசிய வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் வீரர்கள் தினம்தோறும் 8 கிலோ மட்டன் சாப்பிடுவது போல் தெளிவாக தெரிகிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக சாடியுள்ளார். ...
-
குர்பாஸுக்கு பேட்டை பரிசளித்த பாபர் ஆசாம்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மனுல்லா குர்பாஸ்க்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தனது கிரிக்கெட் பேட்டை பரிசளித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஃப்கான் வெற்றியை ரஷித் கானுடன் நடனமாடி கொண்டாடிய இர்ஃபான் பதான்!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆஃப்கானிஸ்தானின் வெற்றியை அந்த அணியின் ரஷித் கானுடன் இணைந்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் நடனமாடி கொண்டாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எங்கள் அணிக்கும், எங்கள் நாட்டிற்கும் பெருமையை தேடித் தர விரும்புகிறோம் - ஷாஹிதி!
ஏற்கனவே இங்கிலாந்து அணியை வீழ்த்திய நாங்கள் தற்போது பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியுள்ளதில் மகிழ்ச்சி என ஆஃப்கானிஸ்தன் அணி கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
சுமாராக செயல்பட்டாலும் கூட தோல்வியை சந்திப்பீர்கள் - பாபர் ஆசாம் காட்டம்!
மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. நீங்கள் ஒரு துறையில் சுமாராக செயல்பட்டாலும் கூட தோல்வியை சந்திப்பீர்கள் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆஃப்கானிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளனர். ...
-
பாபர் ஆசாமினால் அணி மீதான அழுத்தத்தை எடுக்க முடியவில்லை - கௌதம் கம்பீர்!
பாபர் ஆசாம் அழுத்தத்தில் இருக்கிறார். அவரது அணியும் அழுத்தத்தில் இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாபர், ஷஃபிக் அரைசதம்; ஆஃப்கானிஸ்தானுக்கு 283 இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 283 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்குள்ள மைதானங்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன - இமாம் உல் ஹக்!
ஆடுகளங்களும் பேட்டிங் செய்ய மிக சாதகமாக இருக்கின்றன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய கடினமாக இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார் . ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24