Hardik pandya ipl
ஹர்திக் பாண்டியா போன்ற கேப்டன் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் - சாய் சுதர்சன்!
ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி எல்லாருடைய கணிப்பையும் தவிடு பொடியாக்கி டி20 கிரிக்கெட்டுக்கு இன்னொரு வடிவத்தை கொடுத்திருக்கிற அணியாகும். இந்த அணியில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் இளம் வீரர் சாய் சுதர்சன் முக்கிய பேட்ஸ்மேனாக உயர்ந்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் 96 ரன்கள் விளாசி, தன் திறமையின் மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் முடிவுக்குப் பின்னால் பேசிய அவர், “என்னுடைய முந்தைய அனைத்து ஆட்டங்களிலும் நான் கில் உடன் இணைந்து விளையாடினேன். அவர் வேகமாக ரன்கள் எடுத்தார். நான் இந்த முறை சகா பாய் உடன் இணைந்து விளையாடினேன். ரன் விகிதம் சரிந்தது. நாங்கள் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இருந்தோம். எனவே அடிப்பதற்கான வாய்ப்புகளை எடுப்பது நல்லது என்று நினைத்தேன். நான் அந்த நோக்கத்துடன் விளையாடினேன்.
Related Cricket News on Hardik pandya ipl
-
மோஹித் சர்மாவை ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்தது ஏன்? - ஹர்திக் பாண்டியா!
சென்னை அணியுடனான இறுதி போட்டியின் கடைசி ஓவரின் போது பந்துவீச்சாளர் மோஹித் சர்மாவை, கேப்டன் ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்து கொண்டே இருந்தது ஏன் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா!
தோனியிடம் தோற்றதில் கவலைப்பட மாட்டேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியா இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு கேப்டன் ஆவார் - மைக்கேல் வாகன்!
விரைவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி கோப்பையை தன்வசப்படுத்துமா சிஎஸ்கே?
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஷுப்மன் கில் இந்திய அணிக்கும் சூப்பர் ஸ்டாராக திகழப்போகிறார் - ஹர்திக் பாண்டியா!
யாரோ ஒருவரை த்ரோ போட வைத்து அடிக்கும் மாதிரி ஷுப்மன் கில் இன்று பவுலர்களை எதிர்கொண்டு அதிரடி காட்டினார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மோஹித் அபாரம்; மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்து மிரட்டிய ஷுப்மன்; இலக்கை எட்டுமா மும்பை?
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 234 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2: மும்பை vs குஜராத் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது . ...
-
அடிப்படை தவறுகளால் தோல்வியை சந்தித்துள்ளோம் - ஹர்திக் பாண்டியா!
அடுத்தப் போட்டியில் என் சகோதரர் விளையாடுகிறார். அவரை அகமதாபாத்தில் எதிர்கொள்வேன் என்று நினைக்கிறேன் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
நான் எப்பொழுதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகன் - ஹர்திக் பாண்டியா!
சேப்பாக்கத்தில் மீண்டும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எம் எஸ் தோனி என்கின்ற பெயரால்தான் எங்களுக்கு எல்லா ஆதரவும் கிடைத்தது என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித் தந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
ஷுப்மன் கில்லுக்கு எப்பொழுது எப்படி விளையாட வேண்டும் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்று நன்றாக தெரியும். தற்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் அணியின் வீரர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
நான் எப்பொழுதுமே ஒரு பந்துவீச்சாளர்களின் கேப்டனாகவே செயல்பட்டு வருகிறேன். அந்த வகையில் இந்த வெற்றியும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!
இன்று எங்களுடைய ஆட்டத்தில் ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் அவர் கலக்கினார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
எங்களது மோதல் வெறும் 2 நிமிடங்களில் முடிந்து விடும் - குர்னால் பாண்டியா!
எனக்கும் என்னுடைய தம்பி ஹர்திக் பாண்டியாவுக்கும் அவ்வளவு பாசம் இருக்கிறது. களத்தில் நாங்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டாலும் அது வெறும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும் என குர்னால் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47