Icc t20 world cup
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து!
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி மற்றும் ஒல்லி ஹைர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஹைர்ஸ் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சார்லி டிர் 9 ரன்களுக்கும், கேப்டன் பெர்ரிங்டன் ரன்கள் ஏதுமின்றியும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜ் முன்ஸி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய முன்ஸி 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 72 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Icc t20 world cup
-
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவார் - ரிக்கி பாண்டிங் நம்பிக்கை!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறக்குவார்கள் என உறுதியாக நம்புகிறேன் என்று முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கான் பந்துவீச்சு ஆலோசகராக டுவைன் பிராவோ நியமனம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் ஜாம்பவான் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs PAK: மலிங்காவின் சாதனையை முறியடிப்பாரா சதாப் கான்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவை பின்னுக்கு தள்ள பாகிஸ்தானின் ஷதாப் கானிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் முன்னிலை வகிப்பார் - ஹர்பஜன் சிங் கணிப்பு!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்தை காட்டிலும் சஞ்சு சாம்சனிற்கு இந்திய அணி பிளேயிங் லெவனில் அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
ENG vs PAK: ரோஹித் சர்மா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் அசாம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சர்வதேஅச் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணியில் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் சேர்ப்பு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ரிஸர்வ் வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து - ஸ்காட்லாந்து போட்டி மழையால் ரத்து!
அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியானது மழை காரணமாக டாஸ் வீசப்படாமல் கவிடப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸி அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்?
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேஎலிய அணியின் ரிசர்வ் வீர்ர்கள் பட்டியலில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க டி20 தொடர்; பிராண்டன் கிங் தலைமையிலான விண்டீஸ் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி த்ரில் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: மே 25-ல் அமெரிக்கா செல்லும் இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் முதல் குழுவானது மே 25ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்தை பந்தாடி நெதர்லாந்து அணி அபார வெற்றி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்திற்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24