Icc t20
டி20 உலகக்கோப்பை 2024: சாம் கரண் சாதனையை முறியடித்த ஃபசல்ஹக் ஃபரூக்கி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்த ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் மற்றும் ஸத்ரான் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 76 ரன்களையும், இப்ராஹிம் ஸத்ரான் 70 ரன்களையும் சேர்த்தனர். உகாண்டா அணி தரப்பில் காஸ்மஸ் கேவூடா, கேப்டன் பிரையன் மசாபா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Icc t20
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ...
-
T20 WC 2024: ஃபசல்ஹக் ஃபரூக்கி அபார பந்துவீச்சு; ஆஃப்கானிடம் சரணடைந்தது உகாண்டா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
151 கிமீ வேகத்தில் வந்த பதிரானாவின் யார்க்கர்; தடுமாறி கீழே விழுந்த கிளாசென் - வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் யார்க்கர் பந்தை எதிர்கொண்டு தடுமாறி கீழே விழுந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
என் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறந்த விஷயங்களில் இதுவும் ஒன்று - சஞ்சு சாம்சன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார். ...
-
T20 WC 2024: குர்பாஸ், ஸத்ரான் அரைசதம்; உகாண்டா அணிக்கு 184 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : சாதனை படைத்த நோர்ட்ஜே, பார்ட்மேன்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன்ரிச் நோர்ட்ஜே, ஓட்னில் பார்ட்மேன் ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். ...
-
T20 WC 2024: இலங்கைக்கு எதிராக போராடி வென்றது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: சாம்பியன் அணிக்கு 20.4 கோடி; பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது. ...
-
T20 WC 2024: நோர்ட்ஜே, ரபாடா அபாரம்; இலங்கையை 77 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது - முகமது கைஃப்!
பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஸமான், இஃப்திகார் அஹ்மதை தவிர்த்து மற்ற பேட்டர்கள் அனைவரும் 125 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் விளையாடுகிறார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம் - அயர்லாந்து பயிற்சியாளர் நம்பிக்கை!
டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் உங்கள் அணியில் உள்ள ஏதேனும் இரண்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே நீங்கள் உலகின் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என அயர்லாந்து அணி தலைமை பயிற்சியாளர் ஹென்ரிச் மாலன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24