Icc
இறுதிப்போட்டியை எதிர்நோக்கி கார்த்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு டேவிட் மில்லர் 101 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 47 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்க தவறியதால் 212 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்ததோடு போட்டியையும் பரபரப்பாக்கி விட்டனர். இலகுவாக வெற்றி பெற வேண்டிய எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயத்தை கண் முன் காட்டும் அளவிற்கு தென் ஆப்ரிக்கா வீரர்கள் வெற்றிக்காக போராடினாலும், இலக்கு மிக குறைவானது என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பொறுமையாக விளையாடி 47.2 ஓவரில் இஅக்கை எட்டினர். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 8ஆவது முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
Related Cricket News on Icc
-
இந்தியாவை எதிர்கொள்வோம் என கனவிலும் நினைக்கவில்லை - டிராவிஸ் ஹெட்!
இந்திய அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எதிர்கொள்வோம் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 8ஆவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
ஜெர்சியை மாற்றிக்கொண்ட ரோஹித் சர்மா - டேவிட் பெக்காம்!
இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் ஜெர்சியை பரிசளித்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டியை காணவரும் பிரதமர் மோடி!
அஹ்மதாபாத்தில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ...
-
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் - ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்களை சாதனையை முறியடிப்பார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மில்லர் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 213 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐசிசி உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சதம் அடித்தேனா இல்லையா என்பது முக்கியமல்ல - ஷுப்மன் கில்!
தொடக்கத்திலேயே சந்தித்த அதிகப்படியான காய்ச்சலின் தாக்கம் தான் இப்போட்டியில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட போது வெயில் தாங்க முடியாமல் தாம் வெளியேறியதற்கான காரணம் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
நாம் ரோகித் சர்மாவின் பெயரை அதிகம் பேச மாட்டோம் - வாசிம் அக்ரம்!
ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய அவர் பவுலர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரோஹித் சர்மா ஒரு பயமற்ற கேப்டன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நான் அடுத்தடுத்த போட்டிகளில் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன் என கூறியுள்ளார். ...
-
ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் ஹீரோ - நாசர் ஹுசைன் பாராட்டு!
ஷமி மற்றும் விராட் கோலி ஆகியோர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றாலும் ரோஹித் சர்மா தான் இந்த வெற்றியின் உண்மையான நாயகன் என்று நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார். ...
-
தரமான அணியிடம் தோல்வி அடைந்ததில் நினைத்து நாங்கள் மகிழ்கிறோம் - கேன் வில்லியம்சன்!
இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார். ...
-
வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கொண்டு வந்ததில் மகிழ்ச்சி - ரோஹித் சர்மா!
எவ்வளவு சீக்கிரம் இந்த போட்டியை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க நினைத்தேன். ஏனெனில் இந்த போட்டியில் நிச்சயம் எங்களுக்கு அழுத்தம் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தோம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
எனக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்துவதற்கு நான் முயற்சிக்கிறேன் - முகமது ஷமி!
வில்லியம்சன் கேட்ச் தவற விட்டதால் மோசமாக உணர்ந்ததாக தெரிவிக்கும் ஆட்டநாயகன் ஷமி அதற்காக தாமே ரிஸ்க் எடுத்து வேகத்தை மாற்றி விக்கெட்டை எடுத்ததாக கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24