If kohli
SA vs IND, 2nd Test: 55 ரன்களில் ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்கா; இரண்டே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய இங்கிடி, ரபாடா!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளும் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்று கேப்டவுன் நகரில் தொடங்கியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகேஷ் குமாரும் சேர்க்கப்பட்டனர். அதன்படி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா அணி. குறிப்பாக மொகமது சிராஜின் வேகப் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்டர்கள் நிலைகுலைந்தனர்.
Related Cricket News on If kohli
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-ல் விராட் கோலி; அஸ்வின் தொடர்ந்து ஆதிக்கம்!
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் விராட் கோலி 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை கண்காணிக்கும் பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதற்காக இந்திய அணியின் 30 வீரர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாபர் ஆசாம் ஃபார்முக்கு திரும்ப விராட் கோலியை பின்பற்ற வேண்டும் - முஷ்டாக் அஹ்மத்!
பாபர் ஆசாம் ஃபார்முக்கு திரும்ப கடந்த காலங்களில் சதமடிக்காமல் தடுமாறியபோது சிறிது ஓய்வெடுத்து கம்பேக் கொடுத்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் அஹ்மது ஆலோசனை கூறியுள்ளார். ...
-
விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடித்தேன் - டேவிட் பெட்டிங்ஹாம்!
தடுமாற்றமான சமயங்களில் விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடிப்பேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரர் டேவிட் பெட்டிங்ஹாம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
நான் பந்துவீசியதில் இவர்கள் தான் பெரிய சவாலை கொடுத்தனர் - நாதன் லையன்!
தம்முடைய கேரியரிலேயே இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்,விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் பெரிய சவாலை கொடுத்ததாக நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் பந்துவீச்சில் சிக்சரை பறக்க விடும் விராட் கோலி; வைரலாகும் காணோளி!
இந்திய அணியின் வீரர்களின் வலைப்பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தை விராட் கோலி இறங்கி வந்து சிக்சர் விளாசிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
2023ஆம் ஆண்டில் விராட் கோலி படைத்த சாதனைகள்!
2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவோம் - ரோஹித் சர்மா!
இரண்டாவது போட்டிக்கு முன்னதாக சிறப்பான முறையில் தயாராகி தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுத்து வெற்றி பெறும் வகையில் விளையாடுவோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
விராட், ராகுல் ஆகியோர் ஆட்டமிழக்கும் வரை நிம்மதியாக இருந்ததில்லை - ஜஸ்டின் லங்கர்!
விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஆட்டமிழக்கும் வரை கொஞ்சம் கூட நிம்மதியாக இருந்ததில்லை என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை ஏன் மீண்டும் கேப்டனாக நியமிக்க கூடாது - சுப்பிரமணியம் பத்ரிநாத்!
ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வீரநடை போட வைத்த விராட் கோலி ஏன் ரோஹித்துக்கு பதிலாக கேப்டனாக இருக்கக் கூடாது என முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
நடப்பாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சராசரியுடன் முதலிடம் பிடித்த விராட் கோலி
நடப்பாண்டில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
நல்ல திறமை இருந்தும் இந்திய அணியால் குறைந்த வெற்றிகளையே பெற்றுள்ளது - மைக்கேல் வாகன்!
உலகிலேயே திறமைக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத போதிலும் இந்தியா மட்டுமே குறைவான சாதனை வெற்றிகளை பெற்று வருவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
இப்போதெல்லாம் 7 நாட்களுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது போல் அட்டவணை அமைக்கப்படுகிறது. அதனால் பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47