Indian cricket league
ஐபிஎல் 2024: ஸ்டோக்ஸை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஜோ ரூட்!
வரும் டிசம்பர் 19ஆம் தேதி 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், தக்கவைப்பு காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக ஐபிஎல் 2024ல் இருந்து விலகியுள்ளார். ரூட்டின் முடிவை தாங்கள் மதிக்கிறோம் என்று ராயல்ஸ் தனது இணையதளத்தின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அணியின் அணியின் கிரிக்கெட் இயக்குனர் குமார் சங்கக்கார "எங்கள் தக்கவைப்பு உரையாடல்களின் போது, ஐபிஎல் 2024 இல் பங்கேற்பதில்லை என்ற தனது முடிவை ஜோ எங்களிடம் தெரிவித்தார். மேலும் குறுகிய காலத்தில் கூட, ஜோ ரூட், உரிமையாளருக்கும் அவரைச் சுற்றியுள்ள வீரர்களுக்கும் இவ்வளவு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. குழுவைச் சுற்றியுள்ள அவரது ஆற்றல் மற்றும் ராயல்சுக்கு அவர் கொண்டு வந்த அனுபவத்தை இழக்க நேரிடும். அவருடைய முடிவை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம் மற்றும் அவர் செய்யும் எல்லாவற்றிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
Related Cricket News on Indian cricket league
-
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
அடுத்த ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எல்எஸ்ஜி இடமிருந்து ரொமாரியோ ஷெப்பர்ட்டை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்டை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் பரிமாற்றம் செய்துள்ளது. ...
-
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
ஐபிஎல் தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் நவம்பர் மாதத்தில் முழு உடல்தகுதியை எட்ட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட் லீக்குகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு எதிராக விளையாடுவது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக டேனியல் விட்டோரி நியமனம்!
நடப்பாண்டும் படுதோல்வியைச் சந்தித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது புதிய பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரியை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
இங்கிலாந்து குடியுரிமை பெறும் முகமது அமீர்; ஐபிஎல்-லில் பங்கேற்க திட்டம்!
வருகிற 2024ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பிரிட்டிஷ் குடியுரிமை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நான் எதிர்கொண்டதில் இவர்கள் மூவரும் தான் கடினமான பந்துவீச்சாளர்கள் - ஏபிடி வில்லியர்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் ஏபிடி வில்லியர்ஸ், தான் விளையாடியதில் யார் மிகவும் கடினமான பந்துவீச்சாள்ர் என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் கைல் ஜேமிசன்; பின்னடவை சந்திக்கும் சிஎஸ்கே!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் வரவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
ஐஎல்டி20 தொடரில் விளையாடத் தயாராகும் ராபின் உத்தப்பா!
சர்வதேச மற்றும் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார் ராபின் உத்தப்பா. ...
-
ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடர் போட்டிகளின் எண்ணிக்கை வருங்கலாங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவர் அருண் சிங் தூமல் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா; இம்முறை கிரிக்கெட்டின் அடுத்த வடிவத்தில்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி10 லீக் தொடரில் விளையாடப்போவது உறுதியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் - கபில் தேவ் சாடல்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அழுத்தமாக இருந்தால் அதில் விளையாடாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார். ...
-
கிரிக்கெட்டையே வெறுத்துவிட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல்லில் விளையாடியதால்தான் தனது தந்தை இறப்பதற்கு முன் கடைசியாக அவரை பார்க்க முடியவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47