Indian cricket
பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இடம்பிடிக்காத முகமது ஷமி; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Indian cricket
-
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
IND vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட டாம் லேதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 301 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
IND vs NZ, 2nd Test: சான்ட்னர் சுழலில் சிக்கி 156 ரன்களில் ஆல் அவுட்டானது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
புல்டாஸ் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி புல்டாஸ் பந்தில் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs NZ, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
அதிகமுறை டக் அவுட்; சச்சினின் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
குறிப்பிட்ட லெந்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன் - வாஷிங்டன் சுந்தர்!
நான் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பந்துவீச கவனம் செலுத்தினேன், அங்கும் இங்கும் எனது வேகத்தை மாற்றினேன். அதற்கான பலனையும் பெற்றுள்ளேன் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். ...
-
நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட்ட இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இந்தியாவிற்கு இந்த மூன்று வீரர்கள் அவசியம் - பிரெட் லீ!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமானால் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் தேவை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 2nd Test: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து நிதான ஆட்டம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய களமிறக்க வேண்டும் - கிளார்க் அறிவுரை!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுறுத்தியுள்ளார். ...
-
அணி நிர்வாகம் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளது - கௌதம் கம்பீர்!
அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வீரர்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது நிபுணர்களின் கருத்து மூலமாகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை என இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24