Indian cricket
Asian Games 2023: ஜெய்ஸ்வால் அபார சதம்; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. இதில், மகளிர் மற்றும் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியும் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்கம் கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது ஆண்களுக்கான டி20 போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா காலிறுதிப் போட்டியின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் காலிறுதிப் போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உள்பட 100 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார்.
Related Cricket News on Indian cricket
-
உலகக்கோப்பை தொடருக்கான ஹர்பஜன் சிங்கின் கணிப்புகள்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்? அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ள வீரர் யார்? அதிக விக்கெட் எடுக்க போவது யார்? என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
உங்களையும் தோளில் தூக்கி கொண்டாட தயாராக இருக்கிறோம் - விரேந்திர சேவாக்!
இந்தியாவை வெற்றி பெற வைத்தால் நாங்கள் 2011இல் சச்சினை போல தோளில் தூக்கி கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று விராட் கோலியை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
நான் நானாக இருக்கவே முயற்சி செய்வேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
நான் தோனி இடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும் என இந்திய அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்களில் விராட் கோலியும் இருப்பார் - ஏபிடி வில்லியர்ஸ்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விராட் கோலி மிகச்சிறந்த ஆட்டம் வெளிவரும் என்று தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
தனிப்பட்ட காரணத்தினால் மும்பை திரும்பிய விராட் கோலி; ரசிகர்கள் குழப்பம்!
நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் பங்கேற்க வந்த இந்திய அணியிடனருடன் நட்சத்திர வீரர் விராட் கோலி இல்லாதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
‘எனக்கு இது பழகிவிட்டது’ - அணியில் இடம் கிடைக்காதது குறித்து மனம் திறந்த சஹால்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தான் இடம் பெறாதது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சஹல் பேசியுள்ளார். தற்போது அவர் இங்கிலாந்தில் கென்ட் கவுன்டி கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். ...
-
அஸ்வினால் கீ ப்ளேயராக இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரில் அஸ்வினின் இடம் அவசியம் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டின் வரலாற்றில் யார் மகத்தான ஃபினிஷர்? - டேவிட் வார்னரின் பதில்!
கிரிக்கெட்டின் வரலாற்றில் யார் மகத்தான ஃபினிஷர் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் பதிலளித்துள்ளார். ...
-
மீண்டும் தந்தையாகும் விராட் கோலி?
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினர் மீண்டும் பெற்றோராக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இது என்னுடைய கடைசி உலகக்கோப்பை தொடர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்த உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
நான் இதனை நினைத்துக்கூட பார்க்கவில்லை- ரவிச்சந்திரன் அஸ்வின்!
உண்மையை கூற வேண்டும் என்றால் நான் உலகக்கோப்பை தொடருக்காக தேர்வாகி இங்கு நிற்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வினுக்கு பதிலாக அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
அக்ஸர் படேல் இடத்தில் அஸ்வின் சரியான தேர்வு கிடையாது என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தற்பொழுது கூறியிருப்பது சிறிய சலசலப்புகளை உருவாக்கி இருக்கிறது. ...
-
விராட், ரோஹித் கடந்த 10 வருடங்களாக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் - ஜோஷ் ஹசில்வுட்!
ஆஸ்திரேலிய அணியின் அடுத்த மெக்ராத் என்று கூறப்படும் ஜோஷ் ஹசில்வுட் கடந்த எட்டு பத்து வருடங்களாக கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? என்கின்ற தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார். ...
-
தான் மற்றும் தோனி விளையாடிய இடத்தில் யாருக்கு வாய்ப்பு தர வேண்டும் - யுவராஜ் சிங் கருத்து!
நான்காம் இடத்தில் யார் விளையாட வேண்டும்? மகேந்திர சிங் தோனி விளையாடிய ஐந்தாம் இடத்தில் யார் விளையாட வேண்டும்? என்று யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24