Ipl
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில்லை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மொஹாலியில் நடைபெற்ற ஒப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் போராடி 153/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்தியூ சார்ட் 36 (24) ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 154 ரன்கள் துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில்லுடன் இணைந்து 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த விருத்திமான் சஹா 5 பவுண்டரியுடன் அதிரடியாக 30 (19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சாய் சுதர்சன் 2ஆவது விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடைசி வரை அதிரடியாக விளையாடாமல் 19 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்த சில ஓவர்களில் கேப்டன் பாண்டியாவும் 8 (11) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட சுப்மன் கில் அரை சதமடித்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் பதறாமல் செயல்பட்ட ராகுல் திவாட்டியா பவுண்டரியுடன் 5* (2) ரன்களும் டேவிட் மில்லர் 17* (18) ரன்களும் எடுத்து 19.5 ஓவரில் குஜராத்தை வெற்றி பெற வைத்தனர்.
Related Cricket News on Ipl
-
ஐபிஎல் 2023: ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி உரிய நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்கிற காரணத்திற்காக ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. ...
-
தோனி வெற்றிகரமான ஃபினிஷராக இருபதற்கு இதுதான் காரணம்- ஷேன் வாட்சன்!
தோனி இத்தகைய வெற்றிகரமான ஃபினிஷர் ஆக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் மற்றவர்களை விட அவரிடம் இருக்கும் இந்த வித்தியாசமான பழக்கம் தான் என்று முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!
நடப்பு சீசனில் தோனி விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
இப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
இது போன்ற போட்டிகளில் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை மிடில் ஓவர்களில் சில ஷாட்டுகள் அடித்து நம் பக்கம் மொத்தமாக திருப்புவதற்கு பார்க்க வேண்டும் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய ஷிகர் தவான்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் ஷிகர் தவான் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் அரைசதம்; பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சந்தீப் சர்மாவை புகழ்ந்து தள்ளிய பிரெட் லீ!
சந்தீப் சர்மா கடைசி மூன்று பந்துகளையும் மிகச் சிறப்பாக வீசி, மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு இல்லாத போதும் வென்றார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரபாடா!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டியில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸை 153 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: புதிய உச்சம் தொட்ட சிஎஸ்கே - ராஜஸ்தான் போட்டி!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் தோனி 20ஆவது ஓவரில் பேட்டிங் செய்கையில், ஜியோ சினிமா செயலியில் சுமார் 2.2 கோடி பேர் நேரலையில் பார்த்திருக்கின்றனர். ...
-
ஐபிஎல் 2023: விதிகளை மீறியதாக அஸ்வினுக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
தோனி குறித்து வைரலாகும் சந்தீப் சர்மா ட்வீட்!
கனவு நிறைவேறியது என்று நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வெற்றி பெற்றுத் தந்த சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி அணியில் இணைவதை தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் - வநிந்து ஹசரங்கா!
பெங்களூர் ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு தன்னால் பந்துவீச்சின் அளவை மாற்றிக் கொள்ள முடியும் என ஆர்சிபி வீரர் வநிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24